மும்பை : 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்பான அட்டவணையை தற்போது ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன்படி அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில் குரூப் சுற்றில் பத்து அணிகளும் ரவுண்டு ராபின் அடிப்படையில் தங்களுக்குள் பல நடத்தும் இதில் டாப் நான்கு இடங்களை பிடிக்கும் அணி அரை இறுதிச் சற்றுக்குச் செல்லும்.
இந்த நிலையில் இந்திய அணி தனது முதல் போட்டியில் அக்டோபர் எட்டாம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இதனைத் தொடர்ந்து அக்டோபர் 11ம் தேதி டெல்லியில் இந்தியாவும் ஆப்கானிஸ்தான் அணியும் பல பரிட்சை நடத்துகிறது.உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கும் இந்தியா பாகிஸ்தான் போட்டி அக்டோபர் 15ஆம் தேதி அகமதாபாத்தில் நடக்கிறது.
இதனை தொடர்ந்து அக்டோபர் 19ஆம் தேதி இந்தியா வங்கதேசம் அணிகள் புனேவில் மோதுகின்றன. இதனை தொடர்ந்து அக்டோபர் 22ஆம் தேதி இந்தியா நியூசிலாந்து அணிகள் தர்மசாலாவில் பலப் பரிட்சை நடத்துகின்றன. இதன்பிறகு இந்திய அணிக்கு ஒரு வாரம் போட்டிகள் இல்லை.அக்டோபர் 29ஆம் தேதி லக்னோவில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.
நவம்பர் இரண்டாம் தேதி இந்திய அணி தகுதிச்சுற்று வெல்லும் அணியுடன் மும்பையில் விளையாடும். நவம்பர் 5ஆம் தேதி கொல்கத்தாவில் இந்தியா தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. நவம்பர் 11ஆம் தேதி இந்திய அணி தகுதி சுற்றில் இருந்து வரும் இரண்டாவது அணியை பெங்களூரில் எதிர்கொள்கிறது. இந்தப் புள்ளி பட்டியல் முதல் நான்கு இடங்களை பிடிக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் இந்திய அணி ஐந்து அல்லது ஆறு அணிகளையாவது வீழ்த்த வேண்டும்.