Mar 12, 2026
Thisaigal NewsYouTube
வாஷிங்டன் ஓபன் டென்னிஸ்- சாம்பியன் பட்டத்தை வென்றார் கோகோ காப்
விளையாட்டு

வாஷிங்டன் ஓபன் டென்னிஸ்- சாம்பியன் பட்டத்தை வென்றார் கோகோ காப்

Share:

அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள ராக் க்ரீக் பூங்காவின் வில்லியம் எச்.ஜி. பிட்ஸ்ஜெரால்ட் டென்னிஸ் மைதானத்தில் வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வந்தது. இந்த தொடர் ஜூலை 29-ம் தேதி தொடங்கி நேற்று முடிவடைந்தது.

இதில் நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் அமெரிக்க இளம் வீராங்கனையான கோகோ காப், கிரீஸ் நாட்டை சேர்ந்த மரியா சக்காரியா உடன் பலப்பரீட்சை நடத்தினார். கோகோ காப் அரையிறுதியில் லியுட்மிலா சாம்சோனோவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார். மரியா சக்காரியா, ஜெசிகா பெகுலாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

கோகோ காப் நேற்று நடந்த இறுதி போட்டியில் முதல் இரண்டு செட்டுகளை கைப்பற்றி வெற்றி பெற்றார். 1 மணி நேரம் 24 நிமிடங்கள் நடந்த இந்த போட்டியில் கோகோ காப் 6-2 மற்றும் 6-3 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். நடந்து முடிந்த விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் முதல் சுற்றிலேயே வெளியேறினார். அதன் பின் நடந்த இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தி உள்ளார்.

Related News

ஆசிய சாம்பியன்ஸ் லீக்: காலிறுதிக்கு முன்னேறி JDT வரலாற்று சாதனை!

ஆசிய சாம்பியன்ஸ் லீக்: காலிறுதிக்கு முன்னேறி JDT வரலாற்று சாதனை!

மிலானோ-கார்டினா பாராலிம்பிக்: குறுக்கு நாட்டு பனிச்சறுக்கு போட்டியில் கனடாவின் ஹூடாக் மற்றும் அரெண்ட்ஸ் வெண்கலம் வென்று சாதனை

மிலானோ-கார்டினா பாராலிம்பிக்: குறுக்கு நாட்டு பனிச்சறுக்கு போட்டியில் கனடாவின் ஹூடாக் மற்றும் அரெண்ட்ஸ் வெண்கலம் வென்று சாதனை

முன்னாள் அணிக்கு எதிராக ஹாவர்ட்ஸ் கோல்: லெவர்குசென் அணியுடன் ஆர்சனல் 1-1 என சமநிலை

முன்னாள் அணிக்கு எதிராக ஹாவர்ட்ஸ் கோல்: லெவர்குசென் அணியுடன் ஆர்சனல் 1-1 என சமநிலை

ரூட்டை வீழ்த்தி இந்தியன் வெல்ஸ் காலிறுதிக்கு முன்னேறினார் அல்காரஸ்: 2026-ல் தோல்வியற்ற பயணத்தைத் தொடர்கிறார்

ரூட்டை வீழ்த்தி இந்தியன் வெல்ஸ் காலிறுதிக்கு முன்னேறினார் அல்காரஸ்: 2026-ல் தோல்வியற்ற பயணத்தைத் தொடர்கிறார்

ஈரான் அணிக்கு உலகக்கோப்பையில் அனுமதியுண்டு" – ஃபிஃபா தலைவரிடம் டொனால்ட் ட்ரம்ப் உறுதி!

ஈரான் அணிக்கு உலகக்கோப்பையில் அனுமதியுண்டு" – ஃபிஃபா தலைவரிடம் டொனால்ட் ட்ரம்ப் உறுதி!

டோட்டன்ஹாமை வீழ்த்திய பிறகு அத்லெடிகோ மாட்ரிடில் நீடிப்பதை உறுதி செய்தார் கிரீஸ்மேன்

டோட்டன்ஹாமை வீழ்த்திய பிறகு அத்லெடிகோ மாட்ரிடில் நீடிப்பதை உறுதி செய்தார் கிரீஸ்மேன்