Sep 23, 2026
Thisaigal NewsYouTube
ஆசிய விளையாட்டில் தங்கம் வென்று உலக சாம்பியன் பட்டத்துக்கு குறிவைக்கும் ஷாமலராணி
விளையாட்டு

ஆசிய விளையாட்டில் தங்கம் வென்று உலக சாம்பியன் பட்டத்துக்கு குறிவைக்கும் ஷாமலராணி

Share:

மலேசிய கராத்தே வீராங்கனை , சி ஷாமலராணி, ஜப்பானில் ஐச்சி-நகோயா ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 50 கிலோவுக்குட்பட்ட குமித்தே பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

டொயோஹாஷி உடற்பயிற்சிக் கூடத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், ஹாங் காங் வீராங்கனை சாங் யீ டிங்குடன் மோதிய ஷாமலராணி, ஆட்டம் 0-0 என முடிந்த நிலையில் நடுவர்களின் தீர்ப்பின் மூலம் வெற்றி பெற்றார்.

அரை இறுதியில் உஸ்பெகிஸ்தானின் குல்ஷான் அலிமர்தனோவாவை 3-2 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்திய அவர், கடந்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அவரிடம் கண்ட தோல்விக்கும் பதிலடி கொடுத்தார்.

27 வயதான ஷாமலராணி, மூன்று தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டி தங்கப் பதக்கங்களை ஏற்கனவே வென்றுள்ள நிலையில், தற்போது ஆசிய விளையாட்டுப் போட்டி சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியுள்ளார்.

அடுத்து உலக சாம்பியன் பட்டத்தை வெல்ல இலக்கு வைத்துள்ளீர்களா என்று கேட்ட போது, “நிச்சயமாக” என்று அவர் பதிலளித்தார்.

Related News