Jul 15, 2026
Thisaigal NewsYouTube
முதல் முறையாக கோப்பையை வென்ற மான்செஸ்டர் சிட்டி
விளையாட்டு

முதல் முறையாக கோப்பையை வென்ற மான்செஸ்டர் சிட்டி

Share:

இந்த ஆண்டின் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி இஸ்தான்புல் நகரில் உள்ள அட்டாடர்க் மைதானத்தில் நடைபெற்ற வேளையில், மான்செஸ்டர் சிட்டி, இன்டர் மிலன் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் சம பலத்துடன் விளையாடின. இதனால் முதல் பாதி ஆட்டத்தில் கோல்கள் அடிக்கப்படவில்லை.

இந்நிலையில், இரண்டாவது பாதி ஆட்டத்தில் 68வது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டி வீரர் ரோட்ரி, அபாரமான கோல் அடித்தார். இதன்மூலம் மான்செஸ்டர் சிட்டி 1-0 என முன்னிலை பெற்றது. அதுவே வெற்றி கோலாகவும் அமைந்தது. அதன்பின்னர் இன்டர் சிட்டி அணி பதிலடி கொடுக்க முயன்றும் அவர்களால் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில் மான்செஸ்டர் சிட்டி 1-0 என வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. அத்துடன் கிளப் தொடங்கிய 143 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கோப்பையை அந்த அணி வென்றுள்ளது.

Related News

உலகப் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: "எவரையும் வீழ்த்த முடியும்" - சொந்த மண்ணில் பதக்கம் வெல்ல பி.வி. சிந்து அதீத நம்பிக்கை!

உலகப் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: "எவரையும் வீழ்த்த முடியும்" - சொந்த மண்ணில் பதக்கம் வெல்ல பி.வி. சிந்து அதீத நம்பிக்கை!

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர்: பல ஆண்டு கனவை நனவாக்கிய 50 மற்றும் 40 வயது மூத்த வீரர்கள்

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர்: பல ஆண்டு கனவை நனவாக்கிய 50 மற்றும் 40 வயது மூத்த வீரர்கள்

அர்ஜென்டினாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டம்: இங்கிலாந்து அணிக்கு டெக்லான் ரைஸ் வருகை கூடுதல் பலம்

அர்ஜென்டினாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டம்: இங்கிலாந்து அணிக்கு டெக்லான் ரைஸ் வருகை கூடுதல் பலம்

மாபெரும் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி: ஸ்பெயினில் வெடித்தது நள்ளிரவு கொண்டாட்டம்!

மாபெரும் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி: ஸ்பெயினில் வெடித்தது நள்ளிரவு கொண்டாட்டம்!

உலகக் கோப்பை அரையிறுதி: நடுவர் மீது பாய்ந்த பிரான்ஸ் பயிற்சியாளர் டெஷாம்ப்ஸ்; ஸ்பெயின் அபார வெற்றி!

உலகக் கோப்பை அரையிறுதி: நடுவர் மீது பாய்ந்த பிரான்ஸ் பயிற்சியாளர் டெஷாம்ப்ஸ்; ஸ்பெயின் அபார வெற்றி!

ஜப்பான் ஓபன்: முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி அடைந்தனர் பேர்லி - திணா

ஜப்பான் ஓபன்: முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி அடைந்தனர் பேர்லி - திணா