சுமார் 9 ஆண்டுகளுக்குப் பின்னர் ஃபார்முலா ஒன் கார் பந்தயம் மீண்டும் மலேசியாவுக்குத் திரும்புகிறது.
நாளை முதல் அக்டோபர் 4 ஆம் தேதி வரை செப்பாங் அனைத்துலக பந்தயத் திடலில் பஹ்ரைன் கிராண்ட் பிரி நடைபெறுகிறது.
மத்திய கிழக்கில் ஏற்பட்ட பாதுகாப்பு நிலைமை காரணமாக பஹ்ரைனில் நடைபெறவிருந்த போட்டி ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மலேசியாவில் போட்டியை நடத்த ஃபார்முலா ஒன், எஃப்ஐஏ மற்றும் மலேசியா, பஹ்ரைன் அரசுகள் ஒப்புக் கொண்டன.
இதுவரை சுமார் 95 ஆயிரம் மூன்று நாள் நுழைவுச்சீட்டுகள் விற்பனையாகியுள்ள நிலையில், இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டும் என சிப்பாங் அனைத்துலக பந்தயத் திடல் எதிர்பார்க்கிறது.
கடந்த 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக ஃபார்முலா ஒன் சிப்பாங்கில் நடைபெறுவதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மழை மற்றும் புகைமூட்டம் பந்தயத்துக்கு சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் மலேசிய கிராண்ட் பிரி வெற்றியாளர்களான ஃபெர்னாண்டோ அலோன்சோ, லெவிஸ் ஹெமில்டன், மேக்ஸ் வெர்ஸ்டபன் ஆகியோர் சிப்பாங் அனுபவத்துடன் களமிறங்குகின்றனர்.








