பேங்காக், ஆகஸ்ட்.10-
2025 தாய்லாந்து அனைத்துலகப் பூப்பந்து போட்டியின் நாட்டின் கலப்பு இரட்டையர்களான வீ யீ ஹெர்ன்-சான் வென் சே முதலிடத்தை வென்றனர். இறுதியாட்டத்தில் அவர்கள் உபசரணை ஜோடியைச் சந்தித்தனர். அவ்வாட்டம் தேசிய இணைக்குக் கடுமையான ஒன்றாக இல்லை. 33 றே நிமிடங்களில் அவர்கள் இரு செட்களில் வாகை சூடினர்.
இதுவரை மூன்று முறை அவ்விரு ஜோடிகளும் மோதியுள்ளனர். இம்முறை மலேசியாவுக்குக் கிடைத்தது இரண்டாவது வெற்றியாகும்.