Sep 28, 2026
Thisaigal NewsYouTube
பேராக்கில் உடற்கட்டழகு போட்டி – ஸ்டீவன் மார்க் ஜேம்ஸ் தேசிய நிலையில் வெற்றி
விளையாட்டு

பேராக்கில் உடற்கட்டழகு போட்டி – ஸ்டீவன் மார்க் ஜேம்ஸ் தேசிய நிலையில் வெற்றி

Share:

ஈப்போவில் ஃபிட்னஸ் இன்டர்நேஷனல் பெடரேஷன் பேராக் ஏற்பாட்டில் நடைபெற்ற பேராக் போடிபில்டிங் & ஃபிட்னஸ் செம்பியன்ஷிப் 2026 உடற்கட்டழகு மற்றும் உடற்தகுதிப் போட்டியில், 36 வயதான ஸ்டீவன் மார்க் ஜேம்ஸ் தேசிய நிலையில் வெற்றி பெற்றார்.

பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 240 போட்டியாளர்கள் பங்கேற்ற இப்போட்டியில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பிரிவுகளுடன், மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான சிறப்புப் பிரிவும் இடம்பெற்றது.

மாற்றுத்திறனாளி வீரர்கள் தன்னம்பிக்கையுடன் போட்டியிட்டு பார்வையாளர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றனர். அதேபோல், பெண்களுக்கான வீமன்ஸ் ஃபிசிக் & ஃபிட்னஸ் மாடல் பிரிவிலும் அதிகமானோர் பங்கேற்றனர்.

தேசிய நிலையில் வாகை சூடிய ஸ்டீவன் மார்க் ஜேம்ஸ் கருத்துரைக்கையில் தமது 27 ஆவது வயதிலேயே மாநில அளவிலும் தேசிய அளவிலும் நேரடியாக சாம்பியனாக வாகை சூடிய முதலாவது தமிழர் தாமே என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.

ஃபிட்னஸ் இன்டர்நேஷனல் பெடரேஷன் பேராக் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் ஆர். காளியப்பன் கூறுகையில், ஆண், பெண், மாற்றுத்திறனாளி என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் வாய்ப்பு வழங்குவதே தங்கள் “ஃபிட்னஸ் ஃபோர் ஆல்’ கொள்கையின் நோக்கம் என்றார்.

வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டதுடன், மாற்றுத்திறனாளி பிரிவில் பங்கேற்ற அனைவருக்கும் சிறப்பு ஊக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

Related News

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் - ஒலிம்பிக்கிற்குத் தகுதி பெற்றார் மலேசியாவின் தங்கமங்கை சிவசங்கரி

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் - ஒலிம்பிக்கிற்குத் தகுதி பெற்றார் மலேசியாவின் தங்கமங்கை சிவசங்கரி

36 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய விளையாட்டில் தங்கம் – செபாக் தக்ராவ் வீரர்களுக்கு அன்வார், அஹ்மாட் ஸாஹிட் வாழ்த்து

36 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய விளையாட்டில் தங்கம் – செபாக் தக்ராவ் வீரர்களுக்கு அன்வார், அஹ்மாட் ஸாஹிட் வாழ்த்து

ஃபார்முலா ஒன் போட்டி: இலவச பேருந்து சேவை வழங்கும் ராபிட் கேஎல்

ஃபார்முலா ஒன் போட்டி: இலவச பேருந்து சேவை வழங்கும் ராபிட் கேஎல்

ஹரிமாவ் மலாயா ஆட்டங்கள் நேரடி ஒளிபரப்பு — ஆர்டிஎம் அறிவிப்பு

ஹரிமாவ் மலாயா ஆட்டங்கள் நேரடி ஒளிபரப்பு — ஆர்டிஎம் அறிவிப்பு

ஆசிய விளையாட்டில் தங்கம் வென்று உலக சாம்பியன் பட்டத்துக்கு குறிவைக்கும் ஷாமலராணி

ஆசிய விளையாட்டில் தங்கம் வென்று உலக சாம்பியன் பட்டத்துக்கு குறிவைக்கும் ஷாமலராணி

ஆசியான் விளையாட்டுப் போட்டியில் மலேசியாவிற்கு முதல் பதக்கம் - கராத்தே பிரிவில் கே. தேவேந்திரனுக்கு வெண்கலப் பதக்கம்

ஆசியான் விளையாட்டுப் போட்டியில் மலேசியாவிற்கு முதல் பதக்கம் - கராத்தே பிரிவில் கே. தேவேந்திரனுக்கு வெண்கலப் பதக்கம்

பேராக்கில் உடற்கட்டழகு போட்டி – ஸ்டீவன் மார்க் ஜேம்ஸ் தேச... | Thisaigal News