Oct 15, 2026
Thisaigal NewsYouTube

உலகத் தர வரிசையில் மேன் வெய் சோங்-டீ காய் வுன் 12 ஆவது இடம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:

கோலாலம்பூர், ஜன.28-

கடந்த ஞாயிற்றுக்கிழமை 2025 இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டியில் வென்றதன் வழி, தேசிய ஆடவர் இரட்டையர் ஜோடியான மேன் வெய் சோங்-டீ காய் வுன் உலகத் தரவரிசையில் 12வது இடத்தைப் பிடித்துள்ளனர். இது அவர்களின் இதுநாள் வரையிலான சிறந்த அடைவு நிலையாகும்.

உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு (BWF)வின் அண்மைய உலக தரவரிசையின் அடிப்படையில், வெய் சோங்-காய் வுன் 65,490 புள்ளிகளுடன் உலகில் 13 வது இடத்தில் இருந்து ஓர் இடம் முன்னேறினர்.

போட்டியின் ஆறாம் தரவரிசை ஜோடியான அவர்கள், ஜகார்த்தாவின் இஸ்டோரா செனாயனில் நடந்த இந்தோனேசிய மாஸ்டர்ஸ் போட்டியின் போது பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினர். அவர்கள் போட்டியின் முக்கிய வீரரான ஃபஜர் அல்ஃபியன்-முஹம்மது ரியான் ஆர்டியான்டோ ஜோடியை 21-11, 21-19 என்ற கணக்கில் தோற்கடித்தனர். அவர்கள் 38ட்டே நிமிடங்களில் வெற்றியைப் பதிவு செய்தனர்.

தேசிய பெண்கள் இரட்டையர் ஜோடி பேர்லி டான்-எம் தினா அதே போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்து, ஐந்தாவது இடத்திற்குத் திரும்பினர். இதற்கு முன் அவர்கள் ஏழாவது இடத்தில் இருந்தனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in விளையாட்டு →