Nov 22, 2026
Thisaigal NewsYouTube

ஆசிய விளையாட்டு போட்டிகள் : இந்தியாவுக்கு இதுவரை 87 பதக்கங்கள்.. பட்டியலில் 4-வது இடம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஆசிய விளையாட்டு போட்டிகள் : இந்தியாவுக்கு இதுவரை 87 பதக்கங்கள்.. பட்டியலில் 4-வது இடம்

ஆசிய விளையாட்டு போட்டிகளில் 87 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.

45 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இறுதிகட்டத்தை

நெருங்கியுள்ள இந்த போட்டி தொடரில் 13-வது நாளான நேற்று மட்டும் இந்தியா 3 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் என 7 பதக்கங்களை வென்றது.

ஆசிய விளையாட்டு தொடரில் இதுவரை 21 தங்கம், 32 வெள்ளி, 34 வெண்கலம் என மொத்தம் 87 பதக்கங்களை வென்றுள்ளது. பதக்க பட்டியலில் 4 ஆம் இடத்தில் இந்திய அணி உள்ளது.

14-வது நாளான இன்றும் ஆசிய விளையாட்டு போட்டிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்திய அணி இன்றும் பதக்க வேட்டையை தொடர்ந்து நடத்தி

பதக்கத்தில் சதமடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in விளையாட்டு →
ஆசிய விளையாட்டு போட்டிகள் : இந்தியாவுக்கு இதுவரை 87 பதக்க... | Thisaigal News