Oct 1, 2026
Thisaigal NewsYouTube

சிப்பாங் F1 பந்தயம்: 1 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகி புதிய சாதனை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சிப்பாங் F1 பந்தயம்: 1 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகி புதிய சாதனை

இவ்வார இறுதியில் நடைபெறவுள்ள ஃபோர்முலா 1 பந்தய போட்டிக்காக சிப்பாங் அனைத்துலக சுற்றுப்பாதையான எஸ்ஐசி முழுமையாக தயாராகியுள்ளது.

இதுவரை நடைபெற்ற போட்டிகளிலேயே அதிகபட்சமாக, சுமார் ஒரு லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகி புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து எஸ்ஐசி தலைமைச் செயல் அதிகாரி அஸான் ஷாஃப்ரிமான் ஹானிஃப் கூறுகையில், கிரான்ஸ்டாண்ட் மற்றும் ஹீல்ஸ்டாண்ட் பிரிவுகளில் இன்னும் சுமார் 3,000 டிக்கெட்டுகள் மட்டுமே மீதமுள்ளதாகவும், அவற்றை இணையதளம் மூலமாக மக்கள் வாங்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பந்தயத்திற்கான ஏற்பாடுகள் 100 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், பெரும்பாலான தளவாடப் பொருட்கள் வந்து சேர்ந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வழக்கமாக 6 முதல் 7 மாதங்கள் தேவைப்படும் நிலையில், இந்த முறை இரண்டு மாதங்களுக்கும் குறைவான காலத்தில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அஸான் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு மாதங்கள் பல்வேறு சவால்கள் நிறைந்ததாக இருந்த போதிலும், அனைத்து தரப்பினரின் ஒருங்கிணைந்த முயற்சியால் எஸ்ஐசியை F1 கிரேட் 1 சுற்றுப்பாதை மட்டுமின்றி, முழுமையான F1 போட்டியை நடத்தும் அளவுக்கு தயார்படுத்த முடிந்தது உண்மையிலேயே வியப்புக்குரியது என்றும் அவர் விவரித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in விளையாட்டு →