Jul 28, 2026
Thisaigal NewsYouTube
200 மீட்டர் ஓட்டத்தில் புதிய சாதனை: உசைன் போல்ட்டின் சாதனையை முறியடித்த இளம் வீரர் குவாட்!
விளையாட்டு

200 மீட்டர் ஓட்டத்தில் புதிய சாதனை: உசைன் போல்ட்டின் சாதனையை முறியடித்த இளம் வீரர் குவாட்!

Share:

ஆஸ்திரேலிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், 18 வயதான இளம் வீர்ர் கோட் கோட் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் புதிய உலக சாதனை படைத்து தடகள உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

இப்போட்டியில் 200 மீட்டர் தூரத்தை வெறும் 19.67 வினாடிகளில் கடந்து கோட் கோட் முதலிடம் பிடித்தார். இதன் மூலம், 18 வயதுக்குட்பட்டோர் பிரிவில் (U20) ஜமைக்காவின் ஜாம்பவான் உசைன் போல்ட் 2004-ஆம் ஆண்டு படைத்திருந்த 19.93 வினாடிகள் என்ற சாதனையை அவர் தகர்த்துள்ளார். மேலும், 18 வயது வீரர் ஒருவர் 200 மீட்டர் தூரத்தை இவ்வளவு வேகமாகக் கடப்பது இதுவே முதல் முறையாகும்.

தெற்கு சூடான் வம்சாவளியைச் சேர்ந்த கோட் கோட்டின் இந்த அசுர வேகம், அவரை 'அடுத்த உசைன் போல்ட்' என தடகள விமர்சகர்கள் புகழக் காரணமாகியுள்ளது. கடந்த ஆண்டு தனது 15 வயதிலேயே 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டங்களில் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்த இவர், தற்போது உலக அரங்கில் வரலாற்றுப் பக்கத்தில் இடம் பிடித்துள்ளார்.

Related News

சுகமா மற்றும் பரா சுகமா விளையாட்டு வீரர்களுக்குச் சமமான ஊக்கத்தொகை வழங்கப்படும் - சிலாங்கூர் மந்திரி பெசார் அறிவிப்பு

சுகமா மற்றும் பரா சுகமா விளையாட்டு வீரர்களுக்குச் சமமான ஊக்கத்தொகை வழங்கப்படும் - சிலாங்கூர் மந்திரி பெசார் அறிவிப்பு

டாட்டன்ஹாம் அணியை மீட்க 'உணர்வுடன் கூடிய அர்ப்பணிப்பு' தேவை - பயிற்சியாளர் ராபர்டோ டி ஜெர்பி வலியுறுத்தல்

டாட்டன்ஹாம் அணியை மீட்க 'உணர்வுடன் கூடிய அர்ப்பணிப்பு' தேவை - பயிற்சியாளர் ராபர்டோ டி ஜெர்பி வலியுறுத்தல்

59 வயதில் கோல் அடித்து சாதனை படைத்த ஜப்பான் கால்பந்து ஜாம்பவான் கசுயோஷி மியூரா

59 வயதில் கோல் அடித்து சாதனை படைத்த ஜப்பான் கால்பந்து ஜாம்பவான் கசுயோஷி மியூரா

ஐந்தாவது முறை டூர் டி பிரான்ஸ் சிகரம்: வாழ்க்கையின் சிறிய மகிழ்ச்சிகளில் கவனம் செலுத்தப் போவதாகப் புகசார் அறிவிப்பு

ஐந்தாவது முறை டூர் டி பிரான்ஸ் சிகரம்: வாழ்க்கையின் சிறிய மகிழ்ச்சிகளில் கவனம் செலுத்தப் போவதாகப் புகசார் அறிவிப்பு

ஹங்கேரிய கிராண்ட் பிரிக்ஸ்: நோரிஸ் அபார வெற்றி

ஹங்கேரிய கிராண்ட் பிரிக்ஸ்: நோரிஸ் அபார வெற்றி

சிப்பாங் சர்வதேச சுற்றுப்பாதையில் மீண்டும் ஃபார்முலா 1: பிரதமர் அன்வார் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சிப்பாங் சர்வதேச சுற்றுப்பாதையில் மீண்டும் ஃபார்முலா 1: பிரதமர் அன்வார் அதிகாரப்பூர்வ அறிவிப்பு