Nov 22, 2026
Thisaigal NewsYouTube

புள்ளிகள் பட்டியல்: மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேறியது இந்தியா

திசைகள் செய்திப்பிரிவு
Share:
புள்ளிகள் பட்டியல்: மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேறியது இந்தியா

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் தொடக்கத்தில் இருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன.

இதனால் புள்ளிகள் பட்டியலில் மாறிமாறி முதல் இடத்தை பிடித்து வருகின்றன.

நேற்றைய இந்தியா- இங்கிலாந்து போட்டிக்கு முன்னதாக தென்ஆப்பிரிக்கா முதல் இடத்தில் இருந்தது. அதற்கு முன் இந்தியா முதல் இடத்தில் இருந்தது.

நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்தியா இதுவரை விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்று மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளது.

தென்ஆப்பிரிக்கா 6 போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்று 2-வது இடத்தை பிடித்துள்ளது. எனினும், ரன்ரேட்டில் இந்தியாவை விட தென்ஆப்பிரிக்கா முதல் இடத்தில் உள்ளது.

அந்த அணியின் நெட் ரன்ரேட் 2.032 ஆகும். இந்தியாவின் நெட் ரன்ரேட் 1.405 ஆகும்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in விளையாட்டு →