Nov 22, 2026
Thisaigal NewsYouTube

கேரள பெண்கள் கிரிக்கெட் போட்டிகளுக்கான தூதராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமனம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கேரள பெண்கள் கிரிக்கெட் போட்டிகளுக்கான தூதராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமனம்

தென்னிந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். இந்நிலையில் கேரளா மகளிர் கிரிக்கெட் அணியின் நல்லெண்ணத் தூதராக கீர்த்தி சுரேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கேரளா கிரிக்கெட் சங்கம்(கேசிஏ) நிகழ்வில், நல்லெண்ண தூதராக கீர்த்தி சுரேஷ் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதனை தொடர்ந்து, திருவனந்தபுரத்தில் வரும் 26-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தியா - ஆஸ்திரேலியா டி20 போட்டிக்கான இணையதள டிக்கெட் விற்பனையையும் கீர்த்தி சுரேஷ் தொடங்கி வைத்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in விளையாட்டு →