Jun 6, 2026
Thisaigal NewsYouTube
மெக்சிகோ: உலகக் கோப்பைக்காகப் பள்ளி விடுமுறை அளிக்கும் திட்டம் ரத்து
விளையாட்டு

மெக்சிகோ: உலகக் கோப்பைக்காகப் பள்ளி விடுமுறை அளிக்கும் திட்டம் ரத்து

Share:

உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்காகப் பள்ளிக் கல்வி ஆண்டைக் குறைக்க மெக்சிகோ அரசு எடுத்த முடிவிற்குப் பெற்றோர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்தத் திட்டம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

மெக்சிகோ, அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் உலகக் கோப்பை தொடர் வரும் ஜூன் 11-ஆம் தேதி தொடங்க உள்ளது. இதைக் கருத்தில் கொண்டும், நிலவி வரும் கடும் வெப்ப அலை காரணமாகவும், கல்வி ஆண்டை 40 நாட்களுக்கு முன்னதாகவே அதாவது ஜூன் 5-ஆம் தேதியுடன் முடிக்க மெக்சிகோ கல்வி அமைச்சு முதலில் திட்டமிட்டிருந்தது. இருப்பினும், இந்த முடிவால் சுமார் 2.3 கோடி மாணவர்கள் கல்வியில் பின்தங்கும் நிலை ஏற்படும் என்றும், கற்றல் நேரம் பெருமளவு குறையும் என்றும் கல்வி ஆய்வாளர்களும் பெற்றோர்களும் கவலை தெரிவித்தனர். இது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, ஏற்கனவே திட்டமிட்டபடி ஜூலை 15-ஆம் தேதி வரை பள்ளிகள் செயல்படும் என்றும், அதன் பிறகு 6 வார கால விடுமுறைக்குப் பின் ஆகஸ்ட் 31-ஆம் தேதி புதிய கல்வி ஆண்டு தொடங்கும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் இந்த விவகாரத்தில் தலையிட்டு, மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படாத வகையில் ஒருமித்த கருத்து எட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதைத் தொடர்ந்து இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Related News

உலகக் கோப்பை சவால்களை எதிர்கொள்ள இங்கிலாந்து அணி தயார்: பயிற்சியாளர் தாமஸ் துஷெல் நம்பிக்கை

உலகக் கோப்பை சவால்களை எதிர்கொள்ள இங்கிலாந்து அணி தயார்: பயிற்சியாளர் தாமஸ் துஷெல் நம்பிக்கை

2026 உலகக் கோப்பை கால்பந்து மைதானங்களில் வுவுசெலாக்கள் மற்றும் ஏர் ஹார்ன்களுக்கு ஃபிஃபா தடை

2026 உலகக் கோப்பை கால்பந்து மைதானங்களில் வுவுசெலாக்கள் மற்றும் ஏர் ஹார்ன்களுக்கு ஃபிஃபா தடை

பிரிட்டிஷ் ஓபன் ஸ்குவாஷ்: மூன்றாவது சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினார் மலேசியாவின் சிவ சங்கரி!

பிரிட்டிஷ் ஓபன் ஸ்குவாஷ்: மூன்றாவது சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினார் மலேசியாவின் சிவ சங்கரி!

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: ஸ்வெரெவ், கோஸ்டியுக் அரையிறுதிக்கு முன்னேற்றம்!

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: ஸ்வெரெவ், கோஸ்டியுக் அரையிறுதிக்கு முன்னேற்றம்!

பிரீமியர் லீக் சாதனையாளர் ஜேம்ஸ் மில்னர் தனது 40ஆவது வயதில் கால்பந்திலிருந்து ஓய்வு

பிரீமியர் லீக் சாதனையாளர் ஜேம்ஸ் மில்னர் தனது 40ஆவது வயதில் கால்பந்திலிருந்து ஓய்வு

39 வயதில் அர்ஜென்டினாவிற்கு மீண்டும் ஒரு உலகக் கோப்பையை மெஸ்ஸி வென்று தருவாரா? ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு

39 வயதில் அர்ஜென்டினாவிற்கு மீண்டும் ஒரு உலகக் கோப்பையை மெஸ்ஸி வென்று தருவாரா? ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு