Aug 2, 2026
Thisaigal NewsYouTube
காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற அமீர் டேனியலுக்கு பிரதமர் அன்வார் வாழ்த்து
விளையாட்டு

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற அமீர் டேனியலுக்கு பிரதமர் அன்வார் வாழ்த்து

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.02-

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி வரலாற்றில் ஜூடோ பிரிவில் மலேசியாவுக்கான முதல் தங்கப் பதக்கத்தை வென்று புதிய சாதனை படைத்த Amir Daniel Abdul Majeed-க்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

ஆண்களுக்கான 81 கிலோ எடைப் பிரிவின், இறுதிப் போட்டியில் Amir Daniel வெற்றி பெற்று இந்த வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இந்த வெற்றி குறித்து அன்வார் தமது சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், Amir Daniel-இன் உழைப்பு, ஒழுக்கம் மற்றும் போராட்ட மனப்பான்மை மலேசியாவுக்கு புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளதாக பாராட்டியுள்ளார்.

மேலும், வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த வெற்றியானது, காமன்வெல்த் ஜூடோ அரங்கில் மலேசியாவின் மிகப் பெரிய சாதனைகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

இந்த வெற்றியின் மூலம், Glasgow 2026 Commonwealth போட்டியில் மலேசிய அணி வென்ற தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது.

Related News