Sep 21, 2026
Thisaigal NewsYouTube
2026 உலகக் கோப்பை கால்பந்து மைதானங்களில் வுவுசெலாக்கள் மற்றும் ஏர் ஹார்ன்களுக்கு ஃபிஃபா தடை
விளையாட்டு

2026 உலகக் கோப்பை கால்பந்து மைதானங்களில் வுவுசெலாக்கள் மற்றும் ஏர் ஹார்ன்களுக்கு ஃபிஃபா தடை

Share:

2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறும் மைதானங்களுக்குள் வுவுசெலாக்கள் , விசில்கள் மற்றும் ஏர் ஹார்ன்கள் போன்ற அதிக சத்தம் எழுப்பும் கருவிகளைக் கொண்டு வருவதற்கு ஃபிஃபா தடை விதித்துள்ளது. அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் உள்ள 16 மைதானங்களுக்கும் இந்த மைதான நடத்தை விதிமுறைப் பொருந்தும். கடந்த 2010ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியின் போது வுவுசெலாக்கள் உலகப் புகழ்பெற்ற போதிலும், அவற்றின் தேனீக்கள் மொய்ப்பது போன்ற தொடர்ச்சியான சத்தம் விமர்சனங்களை எதிர்கொண்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், லேசர் கருவிகள், மீண்டும் பயன்படுத்தக்கூடிய தண்ணீர் பாட்டில்கள் ஆகியவற்றை மைதானத்திற்குள் கொண்டு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. உடம்பில் பூசப்படும் வண்ணங்கள் மற்றும் பச்சை குத்திக்கொள்வது ஆடைகளாகக் கருதப்படாது என்றும், ஆடையின்றி மைதானத்திற்குள் நுழைவது அல்லது அந்தரங்க உறுப்புகள் தெரியும்படி ஆடைகளைக் களைவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது என்றும் ஃபிஃபா தெரிவித்துள்ளது. இந்த விதிகளை மீறுபவர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் அல்லது வெளியேற்றப்படுவார்கள். 48 அணிகள் பங்கேற்கும் இந்த உலகக் கோப்பை தொடர் ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை நடைபெறவுள்ளது.

Related News