Jul 28, 2026
Thisaigal NewsYouTube
சீ விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றார் சி. ஷாமலாராணி
விளையாட்டு

சீ விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றார் சி. ஷாமலாராணி

Share:

பேங்காக், டிசம்பர்.12-

தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் நடைபெற்று வரும் சீ விளையாட்டுப் போட்டியில் மலேசிய கராத்தே வீராங்கனை சி. ஷாமலாராணி, தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.

27 வயது ஷாமலாராணி, மகளிர் 50 கிலோவுக்கும் குறைவான குமித்தே பிரிவில் மியன்மாரைச் சேர்ந்த Florerence Nay Chi Htun என்பவரை நான்குக்கு பூஜியம் என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி தங்கத்தை வென்றுள்ளார்.

சீ விளையாட்டுப் போட்டியில் ஷாமலாராணி தங்கத்தை வென்றது இது மூன்றாவது முறையாகும். ஏற்கனவே 2021 இல் வியட்னாமில் ஒரு தங்கத்தையும்,2023 இல் கம்போடியாவில் ஒரு தங்கத்தையும் வென்றுள்ளார். தொடர்ச்சியாக மூன்று முறை தங்கத்தை வென்றது மூலம் ஷாமலாராணி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுச் செய்துள்ளார்.

Related News

சுகமா மற்றும் பரா சுகமா விளையாட்டு வீரர்களுக்குச் சமமான ஊக்கத்தொகை வழங்கப்படும் - சிலாங்கூர் மந்திரி பெசார் அறிவிப்பு

டாட்டன்ஹாம் அணியை மீட்க 'உணர்வுடன் கூடிய அர்ப்பணிப்பு' தேவை - பயிற்சியாளர் ராபர்டோ டி ஜெர்பி வலியுறுத்தல்

59 வயதில் கோல் அடித்து சாதனை படைத்த ஜப்பான் கால்பந்து ஜாம்பவான் கசுயோஷி மியூரா

ஐந்தாவது முறை டூர் டி பிரான்ஸ் சிகரம்: வாழ்க்கையின் சிறிய மகிழ்ச்சிகளில் கவனம் செலுத்தப் போவதாகப் புகசார் அறிவிப்பு

ஹங்கேரிய கிராண்ட் பிரிக்ஸ்: நோரிஸ் அபார வெற்றி

சிப்பாங் சர்வதேச சுற்றுப்பாதையில் மீண்டும் ஃபார்முலா 1: பிரதமர் அன்வார் அதிகாரப்பூர்வ அறிவிப்பு