Apr 17, 2026
Thisaigal NewsYouTube
இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினர் பேர்லி டான்-எம்.தீனா
விளையாட்டு

இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினர் பேர்லி டான்-எம்.தீனா

Share:

கோலாலம்பூர், மே.28-

நாட்டின் முன்னணி மகளிர் இரட்டையர்களான பேர்லி டான்-எம். தீனா சிங்கப்பூர் பொது பூப்பந்து போட்டியின் முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளனர். அவர்கள் ஹாங் காங் ஜோடியைத் தோற்கடிப்பதில் எந்த சிரமத்தையும் எதிர்நோக்கவில்லை.

உலகில் நான்காவது நிலையில் இருக்கும் பேர்லி டான்-எம். தீனா 21-16, 21-18 என்ற நேரடி செட்களில் வெற்றி பெற 32 நிமிடங்கள் மட்டுமே தேவைப்பட்டது.

இருப்பினும், இரண்டாவது சுற்றில் கடுமையான சவால் அவர்களுக்குக் காத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் மலேசிய பொது பூப்பந்து போட்டி வெற்றியாளர்களான ஜப்பானின் யூகி ஃபுகுஷிமா-மாயு மாட்சுமோட்டோவை எதிர்கொள்கின்றனர்.

அந்த ஜப்பானிய ஜோடி முதல் சுற்றில் 32 நிமிடங்களில் அமெரிக்க ஜோடியான பிரான்செஸ்கோ கார்பெட்-ஜென்னி காய் ஜோடியை 21-14, 21-17 என்ற செட் கணக்கில் தோற்கடித்தது.

Related News

உபெர் கோப்பை: முதுகு வலி காரணமாக பியர்லி டான் விலகல் - மலேசிய அணிக்குப் பின்னடைவு

உபெர் கோப்பை: முதுகு வலி காரணமாக பியர்லி டான் விலகல் - மலேசிய அணிக்குப் பின்னடைவு

மெஸ்ஸியின் முன்னாள் குரு ஹோயோஸ் இனி இன்டர் மியாமி பயிற்சியாளர்: நட்புக்கு அப்பாற்பட்ட கண்டிப்பு உறுதி

மெஸ்ஸியின் முன்னாள் குரு ஹோயோஸ் இனி இன்டர் மியாமி பயிற்சியாளர்: நட்புக்கு அப்பாற்பட்ட கண்டிப்பு உறுதி

தாமஸ் மற்றும் ஊபர் கோப்பை: டென்மார்க்கில் 'பாதிப்பு' பயிற்சிகளுடன் களமிறங்கும் மலேசிய அணி!

தாமஸ் மற்றும் ஊபர் கோப்பை: டென்மார்க்கில் 'பாதிப்பு' பயிற்சிகளுடன் களமிறங்கும் மலேசிய அணி!

பிக்கிள்பால் மலேசியா ஓபன் 2026: 70,000 ரிங்கிட் பரிசுத் தொகையுடன் அதிரடித் தொடக்கம்!

பிக்கிள்பால் மலேசியா ஓபன் 2026: 70,000 ரிங்கிட் பரிசுத் தொகையுடன் அதிரடித் தொடக்கம்!

16 ஆண்டுகால நாக்-அவுட் தாகத்தைத் தணிக்குமா மலேசியா? பயிற்சியாளர் இஸ்கந்தர் நம்பிக்கை

16 ஆண்டுகால நாக்-அவுட் தாகத்தைத் தணிக்குமா மலேசியா? பயிற்சியாளர் இஸ்கந்தர் நம்பிக்கை

தாமஸ் கோப்பை 2026: மலேசியாவை ‘கறுப்பு குதிரை’யாகப் பார்க்கிறார் லீ ஜி ஜியா!

தாமஸ் கோப்பை 2026: மலேசியாவை ‘கறுப்பு குதிரை’யாகப் பார்க்கிறார் லீ ஜி ஜியா!