Oct 1, 2026
Thisaigal NewsYouTube

சிப்பாங் அனைத்துலக சுற்றுப்பந்தயத் திடலில் F1 போட்டிக்கான ஏற்பாடுகளை அன்வார் பார்வையிட்டார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சிப்பாங் அனைத்துலக சுற்றுப்பந்தயத் திடலில் F1 போட்டிக்கான ஏற்பாடுகளை அன்வார் பார்வையிட்டார்

சிப்பாங் அனைத்துலக கார் பந்தய சிர்கட்டில் இந்த வார இறுதியில் நடைபெறவுள்ள பார்முலா ஒன் போட்டிக்கான முன் ஏற்பாடுகளை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று பார்வையிட்டார்.

பிற்பகல் 3.30 மணியளவில் அங்கு சென்ற அன்வார், சிப்பாங் மற்றும் பஹ்ரைன் அனைத்துலக சுற்றுப்பந்தய நிர்வாகத்தினரைச் சந்தித்ததுடன், போட்டி நடைபெறும் பகுதிகளையும் பார்வையிட்டார்.

ரசிகர்களின் வருகைக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் மற்றும் வசதிகளைப் பார்வையிட்ட அவர், அரச மலாய் பட்டாள இசைக்குழு மற்றும் பஹ்ரைன் போலீஸ் இசைக்குழுவின் ஒத்திகையையும் கண்டுகளித்தார்.

மேலும், போட்டியில் பணியாற்றும் தன்னார்வலர்களுடன் கலந்துரையாடிய அன்வார், அக்டோபர் 2 முதல் 4ஆம் தேதி வரை நடைபெறவுள்ள பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸுக்கான இறுதி ஏற்பாடுகளையும் பார்வையிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in விளையாட்டு →