Apr 19, 2026
Thisaigal NewsYouTube
தொடர்ந்து மூன்றாவது முறையாக பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழ்நாட்டின் மாரியப்பன்
விளையாட்டு

தொடர்ந்து மூன்றாவது முறையாக பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழ்நாட்டின் மாரியப்பன்

Share:

செப்டம்பர் 04-

பாரிஸ் பாராலிம்பிக்ஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு, ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் (T63) வெண்கலப் பதக்கம் வென்றார்.

இந்த போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த ஃப்ரெச் 1.94 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்றார்.

இந்திய வீரரான ஷரத் குமார் 1.88 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். தமிழகத்தைச் சேர்த்த வீரரான மாரியப்பன் தங்கவேலு 1.85 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலம் வென்றார்.

மாரியப்பன் தங்கவேலு இதற்கு முன்பாக, 2016 ரியோ டி ஜெனிரோ பாராலிம்பிக் போட்டிகளில் உயரம் தாண்டுதலில் (T42) தங்கமும், 2020 டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் உயரம் தாண்டுதலில் (T63) வெள்ளியும் வென்றுள்ளார்.

இந்த நிலையில், மாரியப்பன் தங்கவேலுவை பாராட்டி, பிரதமர் நரேந்திர மோதி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

"ஆடவர் உயரம் தாண்டுதல் T63 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு வாழ்த்துக்கள். பாராலிம்பிக் போட்டிகளில் தொடர்ந்து மூன்று முறை பதக்கங்களை வென்றது மிகவும் பாராட்டுக்குரியது. அவருடைய திறன்கள், தொடர் முயற்சி மற்றும் உறுதி அபூர்வமானவை" என்று தனது பாராட்டுக்களை மோதி தெரிவித்திருந்தார்.

கடந்த மே மாதம் ஜப்பானில் நடந்த 11-வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடரில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றிருந்தார் மாரியப்பன் தங்கவேலு. உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் அரங்கில் அவர் வென்ற முதல் தங்கம் அது.

அந்த இறுதிப் போட்டியில், 1.88 மீட்டருக்கு மேல் உயரம் தாண்டி மாரியப்பன் அசத்தியிருந்தார். அதன் மூலம் புதிய சாதனையையும் படைத்தார். அதற்கு முன்னர், அதே சாம்பியன்ஷிப் தொடரில் ஷரத் குமார் தாண்டிய 1.83 மீட்டர் உயரமே சாதனையாக இருந்தது.

Related News

ஏஎப்சி சாம்பியன்ஸ் லீக்: 10 வீரர்களுடன் விளையாடிய அல்-அஹ்லியிடம் போராடித் தோற்றது ஜேடிடி!

ஏஎப்சி சாம்பியன்ஸ் லீக்: 10 வீரர்களுடன் விளையாடிய அல்-அஹ்லியிடம் போராடித் தோற்றது ஜேடிடி!

பிராங்க் லம்பார்ட் தலைமையிலான கோவென்ட்ரி சிட்டி அணி 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரீமியர் லீக்கிற்குத் தகுதி பெற்றுள்ளது.

பிராங்க் லம்பார்ட் தலைமையிலான கோவென்ட்ரி சிட்டி அணி 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரீமியர் லீக்கிற்குத் தகுதி பெற்றுள்ளது.

தோல்வியிலும் அரையிறுதிக்கு முன்னேறிய கிரிஸ்டல் பேலஸ்: ஷக்தார் டொனெட்ஸ்க் அணியுடன் மோதல் உறுதி!

தோல்வியிலும் அரையிறுதிக்கு முன்னேறிய கிரிஸ்டல் பேலஸ்: ஷக்தார் டொனெட்ஸ்க் அணியுடன் மோதல் உறுதி!

ஆஸ்டன் வில்லா மற்றும் நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட் மோதும் முழு ஆங்கிலேய அரையிறுதி ஆட்டம் உறுதி!

ஆஸ்டன் வில்லா மற்றும் நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட் மோதும் முழு ஆங்கிலேய அரையிறுதி ஆட்டம் உறுதி!

உபெர் கோப்பை: முதுகு வலி காரணமாக பியர்லி டான் விலகல் - மலேசிய அணிக்குப் பின்னடைவு

உபெர் கோப்பை: முதுகு வலி காரணமாக பியர்லி டான் விலகல் - மலேசிய அணிக்குப் பின்னடைவு

மெஸ்ஸியின் முன்னாள் குரு ஹோயோஸ் இனி இன்டர் மியாமி பயிற்சியாளர்: நட்புக்கு அப்பாற்பட்ட கண்டிப்பு உறுதி

மெஸ்ஸியின் முன்னாள் குரு ஹோயோஸ் இனி இன்டர் மியாமி பயிற்சியாளர்: நட்புக்கு அப்பாற்பட்ட கண்டிப்பு உறுதி