சீனப் பொது பூப்பந்துப் போட்டியின் முதல் சுற்றில் வெற்றி பெற்று, பெர்லி டான்-எம். தினா இணை இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. சாங்ஜோ நகரில் நடைபெற்ற மகளிர் இரட்டையர் ஆட்டத்தில், உலக 5-ம் நிலை ஜோடியான இவர்கள், ஜப்பானின் ரிரினா ஹிராமோட்டோ மற்றும் கொகோனா இஷிகாவா இணையை எதிர்த்து விளையாடி 21-16, 21-12 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றனர்.
இதற்கிடையே, மற்றொரு ஆட்டத்தில் கலப்பு இரட்டையர் பிரிவில் கோ சூன் ஹுவாட் - ஷெவோன் லாய் ஜெமி இணை, ஜப்பானின் ஹிரோகி மிதோரிகவா - மிசாகி மட்சுடோமோ ஜோடியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றது. மேலும், மகளிர் ஒற்றையர் பிரிவில் பங்கேற்ற வோங் லிங் சிங் மற்றும் கே. லெட்சானா ஆகியோர் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறினர்.








