May 25, 2026
Thisaigal NewsYouTube
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக டிராவான டெஸ்ட்...சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்தியாவின் தற்போதைய நிலை..!
விளையாட்டு

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக டிராவான டெஸ்ட்...சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்தியாவின் தற்போதைய நிலை..!

Share:

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நிறைவடைந்ததை அடுத்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

2023-2025ம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வரும் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரிலிருந்து தொடங்கியது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக தனது தொடக்க தொடரை ஆடியது. 2 போட்டிகள் கொண்ட அந்த தொடரை 1-0 என இந்திய அணி கைப்பற்றியது. முதலாவது டெஸ்ட்டில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, 2வது போட்டியிலும் வெற்றி பெறும் நிலையில் இருந்தது.

ஆனால் 2வது டெஸ்ட் போட்டிக்கான கடைசி நாள் ஆட்டம் மழை காரணமாக நடைபெறாததால் போட்டி டிரா ஆனது. இதன் மூலம் இந்திய அணி தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் இந்த தொடர் நிறைவடைந்ததும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில் 2 போட்டிகளில் ஆடி 1 வெற்றி, 1 டிரா கண்டுள்ள இந்திய அணி 2வது இடத்துக்கு (66.67%) சரிந்தது.

பாகிஸ்தான் அணி 1 ஆட்டத்தில் ஆடி வெற்றி பெற்றுள்ளதால் அந்த அணி (100%) முதல் இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் ஆஸ்திரேலியா (54.17%) 3வது இடத்திலும், இங்கிலாந்து (29.17%) 4வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் அணி (16.67%) 5வது இடத்திலும், இலங்கை (0%) 6வது இடத்திலும் உள்ளன.

Related News

லிவர்பூல் அணியில் இருந்து கண்ணீருடன் விடைபெற்ற முகமது சாலா: மைதானத்தில் உறைந்த நெகிழ்ச்சியான தருணம்!

லிவர்பூல் அணியில் இருந்து கண்ணீருடன் விடைபெற்ற முகமது சாலா: மைதானத்தில் உறைந்த நெகிழ்ச்சியான தருணம்!

முழங்கால் காயம் காரணமாக சிங்கப்பூர், இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் தொடர்களில் இருந்து மலேசியாவின் வெய் சோங் - காய் வுன் ஜோடி விலகல்

முழங்கால் காயம் காரணமாக சிங்கப்பூர், இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் தொடர்களில் இருந்து மலேசியாவின் வெய் சோங் - காய் வுன் ஜோடி விலகல்

முன்னணி நட்சத்திர வீரர்களை நீக்கியது குறித்து பயமில்லை: இங்கிலாந்து பயிற்சியாளர் தாமஸ் துச்செல் அதிரடி

முன்னணி நட்சத்திர வீரர்களை நீக்கியது குறித்து பயமில்லை: இங்கிலாந்து பயிற்சியாளர் தாமஸ் துச்செல் அதிரடி

கார்டியோலா அளித்த நம்பிக்கையே என்னை ஒரு பயிற்சியாளராக மாற்றியது: வின்சென்ட் கொம்பனி நெகிழ்ச்சி

கார்டியோலா அளித்த நம்பிக்கையே என்னை ஒரு பயிற்சியாளராக மாற்றியது: வின்சென்ட் கொம்பனி நெகிழ்ச்சி

மலேசிய மாஸ்டர்ஸ்: கால் இறுதியுடன் வெளியேறினார் வீராங்கனை லெஷனா

மலேசிய மாஸ்டர்ஸ்: கால் இறுதியுடன் வெளியேறினார் வீராங்கனை லெஷனா

விளையாட்டு வரலாற்றிலேயே மிக மோசமான சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் 2026 உலகக் கோப்பை கால்பந்து தொடர்: நிபுணர்கள் எச்சரிக்கை

விளையாட்டு வரலாற்றிலேயே மிக மோசமான சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் 2026 உலகக் கோப்பை கால்பந்து தொடர்: நிபுணர்கள் எச்சரிக்கை