Aug 3, 2026
Thisaigal NewsYouTube
கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் மலேசியா வரலாற்றுச் சாதனை: 8 தங்கம் வென்று அசத்தல்
விளையாட்டு

கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் மலேசியா வரலாற்றுச் சாதனை: 8 தங்கம் வென்று அசத்தல்

Share:

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ (Glasgow) நகரில் நிறைவடைந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், மலேசியா 8 தங்கம், 3 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 16 பதக்கங்களை வாரிக் குவித்து பதக்கப் பட்டியலில் 10-வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 16 ஆண்டுகளில் காமன்வெல்த் அரங்கில் மலேசியா பெற்ற மிகச் சிறந்த சாதனை இதுவாகும்.

இம்முறை வெறும் 59 வீரர்களைக் கொண்ட மிகச் சிறிய குழுவாகச் சென்ற மலேசிய அணி, இந்த இமாலயச் சாதனையைப் படைத்துள்ளது எனத் தூதுக் குழுத் தலைவர் டத்தோ அவாலன் அப்துல் அஜீஸ் பாராட்டியுள்ளார்.

இதில் அதிகபட்சமாக எடை தூக்கும் அணி 5 தங்கப் பதக்கங்களை வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளது. இவர்களுடன் ஜூடோ விளையாட்டில் அமீர் டேனியல், சைக்கிள் பந்தயத்தில் அசிசுல்ஹஸ்னி அவாங் மற்றும் மாற்றுத் திறனாளி நீளம் தாண்டுதல் பிரிவில் அப்துல் லத்தீஃப் ரோம்லி ஆகியோரும் தங்கம் வென்று புதிய சாதனைப் படைத்துள்ளனர்.

Related News