Oct 18, 2026
Thisaigal NewsYouTube

மழையால் தடைபட்ட 5வது ODI.. இங்கிலாந்தை அதன் சொந்தமண்ணில் வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா!

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மழையால் தடைபட்ட 5வது ODI.. இங்கிலாந்தை அதன் சொந்தமண்ணில் வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா!

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-2 என வென்று அசத்தியுள்ளது ஆஸ்திரேலியா அணி.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று விளையாடியது.

முதலில் நடைபெற்ற டி20 தொடரில் முதல் போட்டியை ஆஸ்திரேலியா வென்றது. இரண்டாவது போட்டியை இங்கிலாந்து வென்ற நிலையில், தொடரை முடிவுசெய்யும் மூன்றாவது டி20 போட்டி மழையால் ரத்துச்செய்யப்பட்டதால் தொடர் சமன் செய்யப்பட்டது.

அதனைத்தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் தொடரிலும் முதலிரண்டு போட்டிகளை ஆஸ்திரேலியா வென்ற நிலையில், அடுத்த இரண்டு போட்டிகளையும் இங்கிலாந்து வெற்றிபெற்று தொடரை 2-2 என்ற கணக்கில் சமனில் வைத்தது.

இந்நிலையில் தொடரை முடிவு செய்யும் 5வது ஒருநாள் போட்டியானது இன்று நடைபெற்றது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 309 ரன்களை குவித்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் மழை குறுக்கிட்டதால் டிஎல்எஸ் முறைப்படி ஆஸ்திரேலியா வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in விளையாட்டு →