36 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் செபாக் தக்ராவ் அணியில் மலேசியா தங்கப் பதக்கம் வென்றதற்காக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமும், துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடியும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மலேசிய அணியின் இந்த வெற்றி நாட்டின் விளையாட்டுத் துறைக்கு பெருமை சேர்த்துள்ளதாக அன்வார் கூறியுள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஆசிய விளையாட்டில் தங்கப் பதக்கத்தை மீண்டும் கைப்பற்றியுள்ள செபாக் தக்ராவ் வீரர்களின் கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் அஹ்மாட் ஸாஹிட் பாராட்டியுள்ளார்.
இந்த வெற்றி, மலேசியக் கொடியை அனைத்துலக விளையாட்டு அரங்கில் மீண்டும் உயர்த்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








