Sep 24, 2026
Thisaigal NewsYouTube
ஹரிமாவ் மலாயா ஆட்டங்கள் நேரடி ஒளிபரப்பு — ஆர்டிஎம் அறிவிப்பு
விளையாட்டு

ஹரிமாவ் மலாயா ஆட்டங்கள் நேரடி ஒளிபரப்பு — ஆர்டிஎம் அறிவிப்பு

Share:

ஹரிமாவ் மலாயா அணியின் 2026 ஆசியான் கிண்ணப் போட்டிகளை ஆர்டிஎம் நேரடியாக ஒளிபரப்பும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

நாளை வங்காளதேசத்திற்கு எதிராக நடைபெறும் ஆட்டம் முதல் இந்த நேரடி ஒளிபரப்பு தொடங்கும் என்று அவர் தெரிவித்தார்.

தேசிய அணியின் ஆட்டங்கள் நேரடியாக ஒளிபரப்பப்படுமா என்று பொதுமக்கள் சமூக ஊடகங்களில் நேற்று கேள்வி எழுப்பியிருந்த நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பிரதமர் கூறினார்.

அதேவேளை, தேசிய அணிக்கும் வீரர்களுக்கும் மலேசியர்கள் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என்றும் அன்வார் கேட்டுக் கொண்டார்.

Related News