Sep 21, 2026
Thisaigal NewsYouTube
சுக்மா 2026: கலைநய நீச்சல் போட்டி நீக்கம் - செலவினங்களைக் குறைக்க முடிவு!
விளையாட்டு

சுக்மா 2026: கலைநய நீச்சல் போட்டி நீக்கம் - செலவினங்களைக் குறைக்க முடிவு!

Share:

ஷா ஆலாம், மே.10-

ஆகஸ்ட் 15 முதல் 24 வரை நடைபெறவுள்ள 2026 சுக்மா விளையாட்டுப் போட்டியில், போதிய மாநிலங்களின் பங்கேற்பு இல்லாத காரணத்தால் renang berirama எனும் 'கலைநய நீச்சல்' போட்டி நீக்கப்படுவதாக சிலாங்கூர் மாநில இளைஞர், விளையாட்டுத் துறை ஆட்சிக் குழு உறுப்பினர் முஹமட் நஜ்வான் ஹாலிமி அறிவித்துள்ளார். இதன் மூலம் மொத்தப் போட்டிகளின் எண்ணிக்கை 469 ஆகக் குறைந்துள்ள நிலையில், தொடக்க விழாவை பிரம்மாண்டமாக நடத்தாமல் எளிய முறையில் நடத்தவும், தன்னார்வலர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மாநில அரசின் சிக்கன நடவடிக்கையாக, இப்பெருவிழாவிற்கான செலவு 100 மில்லியன் ரிங்கிட்டிலிருந்து சுமார் 40 முதல் 50 மில்லியன் ரிங்கிட்டாகப் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related News