Apr 16, 2026
Thisaigal NewsYouTube
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய ஹாக்கி அணி பதக்கம் வெல்லும்- கேப்டன் நம்பிக்கை
விளையாட்டு

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய ஹாக்கி அணி பதக்கம் வெல்லும்- கேப்டன் நம்பிக்கை

Share:

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் ஹாங்சோவ் நகரில் வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கு தயாராகுவதற்காக பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய (சாய்) மையத்தில் பயிற்சி பெற்று வந்த இந்திய ஹாக்கி அணி நேற்று விமானம் மூலம் சீனாவுக்கு புறப்பட்டு சென்றது.

முன்னதாக இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் அளித்த பேட்டியில், 'ஆசிய விளையாட்டு போட்டிக்காக இந்திய அணி தீவிரமாக தயாராகி இருக்கிறது. சமீபத்தில் சென்னையில் நடந்த ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் நமது அணி நன்றாக விளையாடி கோப்பையை வென்றது.

இதேபோல் துணைகேப்டன் ஹர்திக் சிங் கூறுகையில், 'ஆசிய போட்டிக்காக கடுமையான பயிற்சியை மேற்கொண்டு இருப்பதுடன் எல்லோரும் ஒரே இலக்கை நோக்கி செயல்பட்டு வருகிறோம். நாங்கள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் நல்ல நிலையில் போட்டிக்கு செல்கிறோம். கடந்த சில மாதங்களை போல் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவதுடன் சீனாவில் இருந்து பதக்கத்துடன் திரும்புவதே எங்களது இலக்கு' என்றார்.

ஆண்கள் ஹாக்கி போட்டியில் பங்கேற்கும் 12 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் இந்திய அணி 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ளது. சிங்கப்பூர், ஜப்பான், பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், வங்காளதேசம் ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும். 'பி' பிரிவில் தென்கொரியா, மலேசியா, சீனா, ஓமன், தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

Related News

உபெர் கோப்பை: முதுகு வலி காரணமாக பியர்லி டான் விலகல் - மலேசிய அணிக்குப் பின்னடைவு

உபெர் கோப்பை: முதுகு வலி காரணமாக பியர்லி டான் விலகல் - மலேசிய அணிக்குப் பின்னடைவு

மெஸ்ஸியின் முன்னாள் குரு ஹோயோஸ் இனி இன்டர் மியாமி பயிற்சியாளர்: நட்புக்கு அப்பாற்பட்ட கண்டிப்பு உறுதி

மெஸ்ஸியின் முன்னாள் குரு ஹோயோஸ் இனி இன்டர் மியாமி பயிற்சியாளர்: நட்புக்கு அப்பாற்பட்ட கண்டிப்பு உறுதி

தாமஸ் மற்றும் ஊபர் கோப்பை: டென்மார்க்கில் 'பாதிப்பு' பயிற்சிகளுடன் களமிறங்கும் மலேசிய அணி!

தாமஸ் மற்றும் ஊபர் கோப்பை: டென்மார்க்கில் 'பாதிப்பு' பயிற்சிகளுடன் களமிறங்கும் மலேசிய அணி!

பிக்கிள்பால் மலேசியா ஓபன் 2026: 70,000 ரிங்கிட் பரிசுத் தொகையுடன் அதிரடித் தொடக்கம்!

பிக்கிள்பால் மலேசியா ஓபன் 2026: 70,000 ரிங்கிட் பரிசுத் தொகையுடன் அதிரடித் தொடக்கம்!

16 ஆண்டுகால நாக்-அவுட் தாகத்தைத் தணிக்குமா மலேசியா? பயிற்சியாளர் இஸ்கந்தர் நம்பிக்கை

16 ஆண்டுகால நாக்-அவுட் தாகத்தைத் தணிக்குமா மலேசியா? பயிற்சியாளர் இஸ்கந்தர் நம்பிக்கை

தாமஸ் கோப்பை 2026: மலேசியாவை ‘கறுப்பு குதிரை’யாகப் பார்க்கிறார் லீ ஜி ஜியா!

தாமஸ் கோப்பை 2026: மலேசியாவை ‘கறுப்பு குதிரை’யாகப் பார்க்கிறார் லீ ஜி ஜியா!