ஏழு பாரம்பரிய வீரர்களின் ஆவணங்கள் தொடர்பான சர்ச்சைக்கு மலேசிய கால்பந்து ரசிகர்களிடம் புதிய மலேசிய கால்பந்து சங்கத் தலைவர் டத்தோ அப் கானி ஹசான் மன்னிப்பு கேட்டுள்ளார்.
புதிய நிர்வாகம் வீரர்களின் ஆவணங்கள் மற்றும் தேசிய அணிக்கான வீரர் தேர்வு நடைமுறைகளை மேலும் கடுமையாக்கும் என்றும், தமது பதவிக் காலத்தில் இது போன்ற பிரச்சினைகள் மீண்டும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஏழு வீரர்களின் தகுதி தொடர்பான போலி ஆவண விவகாரத்தில் ஃஎப்ஏஎம்முக்கு 3 லட்சத்து 50 ஆயிரம் சுவிஸ் பிராங்க் அபராதமும், வீரர்களுக்கு தலா 2 ஆயிரம் சுவிஸ் பிராங்க் அபராதமும் விதிக்கப்பட்டது.








