May 22, 2026
Thisaigal NewsYouTube
32 ஆண்டுகள் போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி – முதல் முறையாக இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா
விளையாட்டு

32 ஆண்டுகள் போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி – முதல் முறையாக இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா

Share:

தென் ஆப்பிரிக்கா, ஜுன் 27 -

ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறையும், ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கும் ஒரு முறையும் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரானது நடத்தப்பட்டு வருகிறது.இதில், 4 முறை மட்டுமே தென் ஆப்பிரிக்கா அரையிறுதிப் போட்டி வரை வந்து தோல்வியோடு வெளியேறியுள்ளது. இதே போன்று இதுவரையில் 8 டி20 உலகக் கோப்பை தொடரானது நடத்தப்பட்டுள்ளது. இதில், 2 முறை மட்டுமே டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு வந்து தோல்வியோடு வெளியேறியது.

இந்த நிலையில் தான் நடப்பு ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பை தொடரின் மூலமாக 3ஆவது முறையாக தென் ஆப்பிரிக்கா அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதில், இன்று காலை டிரினிடாட்டில் நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 11.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 56 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பின்னர் எளிய இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா 8.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 60 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மேலும், 32 ஆண்டுகள் போராட்டத்திற்கு முதல் முறையாக வெற்றி கிடைத்துள்ளது. அதன்படி, தென் ஆப்பிரிக்கா முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

மலேசிய மாஸ்டர்ஸ்: கால் இறுதியுடன் வெளியேறினார் வீராங்கனை லெஷனா

மலேசிய மாஸ்டர்ஸ்: கால் இறுதியுடன் வெளியேறினார் வீராங்கனை லெஷனா

விளையாட்டு வரலாற்றிலேயே மிக மோசமான சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் 2026 உலகக் கோப்பை கால்பந்து தொடர்: நிபுணர்கள் எச்சரிக்கை

விளையாட்டு வரலாற்றிலேயே மிக மோசமான சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் 2026 உலகக் கோப்பை கால்பந்து தொடர்: நிபுணர்கள் எச்சரிக்கை

ரஃபேல் நடாலின் ஓய்வுக்கால உணர்வுபூர்வமான போராட்டம்: புதிய நெட்ஃபிக்ஸ் ஆவணப்படத் தொடரில் வெளிப்படையான பதிவுகள்

ரஃபேல் நடாலின் ஓய்வுக்கால உணர்வுபூர்வமான போராட்டம்: புதிய நெட்ஃபிக்ஸ் ஆவணப்படத் தொடரில் வெளிப்படையான பதிவுகள்

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தோல்வி: பயிற்சியாளர் சாடல்

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தோல்வி: பயிற்சியாளர் சாடல்

காசாவுக்கு உதவிக்கப்பல்: 16 மலேசியர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோரை சிறைபிடித்த இஸ்ரேல் இராணுவத்திற்கு அன்வார் கடும் கண்டனம்!

காசாவுக்கு உதவிக்கப்பல்: 16 மலேசியர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோரை சிறைபிடித்த இஸ்ரேல் இராணுவத்திற்கு அன்வார் கடும் கண்டனம்!

உலகக் கோப்பை செபாக் தக்ரோவின் குவாட்ரண்ட் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற மலேசிய அணிக்கு பிரதமர் அன்வார் இப்ராகிம் வாழ்த்து

உலகக் கோப்பை செபாக் தக்ரோவின் குவாட்ரண்ட் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற மலேசிய அணிக்கு பிரதமர் அன்வார் இப்ராகிம் வாழ்த்து