ஸ்டேட்ஸ்வில், டிசம்பர்.19-
அமெரிக்காவின் முன்னாள் புகழ்பெற்ற NASCAR பந்தய வீரர் Greg Biffle, நேற்று டிசம்பர் 18 ஆம் தேதி வட கரோலினாவில் நடந்த ஒரு கோர விமான விபத்தில் உயிரழந்தார்.
அவர் பயணித்த தனியார் ஜெட் விமானமான Cessna C550 , வட கரோலினாவின் ஸ்டேட்ஸ்வில் பிராந்திய விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளாகி தீப்பிடித்தது.
இந்த விபத்தில் 55 வயது Greg Biffle, அவரது மனைவி கிறிஸ்டினா, 14 வயது மகள் எம்மா மற்றும் 5 வயது மகன் ரைடர் உட்பட மொத்தம் 7 பேர் உயிரிழந்தனர்.
Greg Biffle, NASCAR வரலாற்றில் 75 சிறந்த வீரர்களில் ஒருவராகக் கருதப்பட்டவர் ஆவார். அவர் தனது வாழ்க்கையில் 19 Cup Series பந்தயங்களில் வெற்றி பெற்று அபார சாதனைப் படைத்துள்ளார்.
கடந்த ஆண்டு ஏற்பட்ட Helene சூறாவளியின் போது, பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தனது சொந்த ஹெலிகாப்டர் மூலம் உதவி வழங்கியதற்காக Greg Biffle அண்மையில் கௌரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.








