Jun 14, 2026
Thisaigal NewsYouTube
10 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியனான கொல்கத்தா
விளையாட்டு

10 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியனான கொல்கத்தா

Share:

இந்தியா, மே 27-

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் 2024 இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3ஆவது முறையாக டிராபியை வென்றுள்ளது.

சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2024 இறுதிப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது 113 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், அபிஷேக் சர்மா 2, டிராவிஸ் ஹெட் 0, ராகுல் திரிபாதி 9 என்று வரிசையாக ஹைதராபாத் வீரர்கள் ஆட்டமிழந்தனர். இவர்களைத் தொடர்ந்து, நிதிஷ் குமார் ரெட்டி 13, எய்டன் மார்க்ரம் 20, ஹென்ரிச் கிளாசென் 16 ரன்களில் வெளியேறினார்.

பின்னர் வந்த ஷாபாஸ் அகமது 8, அப்துல் சமாத் 4, ஜெயதேவ் உனத்கட் 4 ரன்களில் ஆட்டமிழக்க கடைசியாக பேட் கம்மின்ஸ் 24 ரன்களில் வெளியேறினார். இந்தப் போட்டியில் 24 ரன்களே அதிகபட்சமாக ரன்னாக இருந்துள்ளது. இறுதியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பவுலிங்கைப் பொறுத்த வரையில் ரஸல் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஹர்ஷித் ராணா தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். வைபவ் அரோரா, சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

பின்னர் எளிய இலக்கை துரத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சுனில் நரைன் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து குர்பாஸ் அகமது மற்றும் வெங்கடேஷ் ஐயர் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடினர். இதில் குர்பாஸ் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து ஷ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினார்.

இறுதியாக கேகேஆர் 10.2 ஓவர்களில் 115 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3ஆவது முறையாக டிராபியை வென்றுள்ளது. இதற்கு முன்னதாக கவுதம் காம்பீர் தலைமையிலான கேகேஆர் அணியானது 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் டிராபியை வென்றது. தற்போது முதல் முறையாக ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் டிராபியை கைப்பற்றியுள்ளது.

இந்தப் போட்டியில் தமிழக வீரரான வெங்கடேஷ் ஐயர் 26 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 6 ரன்கள் எடுத்தார்.

Related News

10 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியனான கொல்கத்தா | Thisaigal News