Oct 2, 2026
Thisaigal NewsYouTube

சிப்பாங்கில் கார் பந்தயம் – ஆர்டிஎம் நேரடி ஒளிபரப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சிப்பாங்கில் கார் பந்தயம் – ஆர்டிஎம் நேரடி ஒளிபரப்பு

சிப்பாங்கில் நடைபெறும் 2026-ஆம் ஆண்டுக்கான ஃபார்முலா ஒன் பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தயத்தை ஆர்டிஎம் நேரடியாக ஒளிபரப்பும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள மலேசியர்கள் உலகத் தரத்திலான கார் பந்தயத்தை நேரடியாகக் கண்டு ரசிக்க முடியும் என்று அவர் கூறினார்.

இன்று முதல் வரும் 4-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கார் பந்தயம், ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர் ஃபார்முலா ஒன் மீண்டும் சிப்பாங்கிற்குத் திரும்புவதைக் குறிக்கிறது.

1999 முதல் 2017-ஆம் ஆண்டு வரை மலேசிய கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தயம் சிப்பாங்கில் நடைபெற்றது.

இந்த முறை மூன்று நாட்களிலும் ஒரு லட்சம் பேர் வரை பார்வையாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதுடன், அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் வெளிநாட்டினர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in விளையாட்டு →