Sep 21, 2026
Thisaigal NewsYouTube
பீபா உலகக்கோப்பை 2026: ஆர்டிஎம் கிளிக் செயலியின் மூலம் இலவசமாகக் கண்டு களிக்கலாம்
விளையாட்டு

பீபா உலகக்கோப்பை 2026: ஆர்டிஎம் கிளிக் செயலியின் மூலம் இலவசமாகக் கண்டு களிக்கலாம்

Share:

ஆர்டிஎம் கிளிக் செயலியை தங்களது செல்போன்களில் பதிவிறக்கம் செய்வதன் மூலம், பீபா உலகக்கோப்பை 2026 போட்டிகளை, இலவசமாகக் கண்டுகளிக்க முடியும் என்று தொடர்புதுறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் தெரிவித்துள்ளார்.

இந்த உலகக்கோப்பை போட்டிகளை, மலேசியாவின் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பாளர்களான ஆர்டிஎம் மற்றும் யூனிஃபை டிவி நேரலையில் ஒளிபரப்பவுள்ளன.

கடந்த 20 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக அனைத்து மலேசியர்களும் உலகக்கோப்பை போட்டிகளை இலவசமாக காணும் வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் ஃபாஹ்மி ஃபாட்சில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மக்கள் ஆர்டிஎம் கிளிக் செயலியை பதிவிறக்கம் செய்யலாம் அல்லது மைடிவி மற்றும் ஆர்டிஎம் வழியாகவும் கண்டு ரசிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2026-ஆம் ஆண்டு பீபா உலகக் கோப்பையானது கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்காவில் வரும் ஜூன் 11-ஆம் தேதி தொடங்கி ஜூலை 19-ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது.

வரலாற்றிலேயே முதன்முறையாக இதில் 48 நாடுகள் பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News