Oct 23, 2026
Thisaigal NewsYouTube

உச்சகட்ட பரபரப்பில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா

திசைகள் செய்திப்பிரிவு
Share:
உச்சகட்ட பரபரப்பில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா

15-வது ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது.

சூப்பர் சிக்ஸ் சுற்று முடிவில் குரூப்1 பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தானும், குரூப்2 பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்காவும் முறையே முதல்

2 இடங்களை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.

இந்த தொடரின் முதலாவது அரையிறுதி இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் இந்தியா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்நிலையில் 2-வது அரையிறுதியில் பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இன்று மோதி வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வுசெய்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் வீரர்கள் தொடக்க முதலே திணறியது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in விளையாட்டு →