Oct 3, 2026
Thisaigal NewsYouTube

F1: பயணிகள் புகாரைத் தொடர்ந்து சிப்பாங் பேருந்து சேவை மேம்பாடு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
F1: பயணிகள் புகாரைத் தொடர்ந்து சிப்பாங் பேருந்து சேவை மேம்பாடு

சிப்பாங் அனைத்துலக கார் பந்த சிர்கட் தளத்தின் எஸ்ஐசிக்கான ரெபிட் கேஎல் இலவசப் பேருந்து சேவையில், பயணிகள் தெரிவித்த கருத்துகளைத் தொடர்ந்து பேருந்துகளை ஏற்றும் மற்றும் இறக்கும் ஏற்பாடுகள் இன்று முதல் மேம்படுத்தப்பட்டுள்ளன.

நேற்று வெள்ளிக்கிழமை F1 பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸ் நடைபெறும் இடத்துக்குச் சென்ற பயணிகளிடமிருந்து கிடைத்த கருத்துகளின் அடிப்படையில், எஸ்ஐசி மற்றும் சம்பந்தப்பட்ட முகமைகளுடன் இணைந்து இந்த மாற்றங்கள் செய்யப்பட்டதாக ரெபிட் கேஎல் தெரிவித்துள்ளது.

இன்று காலை 11 மணி நிலவரப்படி, போக்குவரத்து மற்றும் பயணிகள் நகர்வு சீராகவும் கட்டுப்பாட்டிலும் இருப்பதாகவும் ரெபிட் கேஎல் கூறியது.

நாளை 4ஆம் தேதி ஞாயிற்றுக்கிாமை வரை நடைபெறும் F1 பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸ் நிகழ்வு முழுவதும் எஸ்ஐசி மற்றும் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் இணைந்து பயணிகள் நகர்வைக் கண்காணித்து, பேருந்து சேவை சீராக நடைபெறுவதை உறுதி செய்யவுள்ளதாக ரெபிட் கேஎல் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in விளையாட்டு →