Aug 13, 2026
Thisaigal NewsYouTube
மரகடோனா மரண வழக்கு: நீதிமன்றத்தில் அரங்கேறிய கூச்சல் குழப்பங்கள்
விளையாட்டு

மரகடோனா மரண வழக்கு: நீதிமன்றத்தில் அரங்கேறிய கூச்சல் குழப்பங்கள்

Share:

மறைந்த காற்பந்து ஜாம்பவான் டீகோ மரடோனாவின் மருத்துவக் குழுவினர் மீதான கவனக்குறைவு வழக்கு விசாரணையின்போது, நீதிமன்றத்தில் கடும் கூச்சல் குழப்பங்கள் மற்றும் வாக்குவாதங்கள் அரங்கேறியுள்ளன. கடந்த 2020ஆம் ஆண்டு மரடோனா காலமானதைத் தொடர்ந்து, அவரது மரணத்திற்கு மருத்துவக் குழுவினரின் அலட்சியமே காரணம் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த ஐந்து மாதங்களாக இந்த வழக்கு விசாரணை நீடித்து வருகிறது.

வழக்கு விசாரணையின் போது முக்கியக் குற்றம் சாட்டப்பட்டவரான தனிப்பட்ட மருத்துவர் லியோபோல்டோ லுக்கே தனது தரப்பு வாதங்களை முன்வைக்க முயன்றபோது, மரடோனாவின் உடற்கூறாய்வு காணொளி திரையிடப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மரடோனாவின் மகள் கடும் வசங்களுடன் கண்ணீருடன் அரங்கத்தை விட்டு வெளியேறியதால் விசாரணை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே, இரு தரப்பு வழக்கறிஞர்களுக்கும் இடையே நீதிமன்றத்திற்குள்ளும் வெளியேயும் சிறுவர்களைப் போல கடுமையான வாக்குவாதங்களும் பரஸ்பர திட்டல்களும் அரங்கேறின. இந்த வழக்கின் விசித்திரமான அம்சமாக மரடோனா உயிர்விட்ட வீட்டின் மினியேச்சர் மாதிரி வடிவம் நீதிமன்றத்திற்குள் கொண்டுவரப்பட்டதுடன், இந்த நீண்ட மற்றும் குழப்பமான நீதிப் போராட்டம் எப்போது முடியும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Related News

சுக்மா 2026: தொடக்க ஆட்டத்திலேயே சிலாங்கூர் அணிக்கு அபார வெற்றி

சுக்மா 2026: தொடக்க ஆட்டத்திலேயே சிலாங்கூர் அணிக்கு அபார வெற்றி

வியட்நாம் கராத்தே போட்டி: பதக்கம் வென்ற கெடா மாநில வீரர்களுக்குக் கூலிமில் பாராட்டு விழா

வியட்நாம் கராத்தே போட்டி: பதக்கம் வென்ற கெடா மாநில வீரர்களுக்குக் கூலிமில் பாராட்டு விழா

நிதி இல்லை என்றாலும் சாதிப்போம்: சுக்மா 2026 போட்டிகளை நடத்த சிலாங்கூர் அதிரடி முடிவு

நிதி இல்லை என்றாலும் சாதிப்போம்: சுக்மா 2026 போட்டிகளை நடத்த சிலாங்கூர் அதிரடி முடிவு

இந்தோனேசியாவின் உலக பூ பந்து  சாம்பியன்ஷிப் பங்கேற்பில் மீது சந்தேகம்

இந்தோனேசியாவின் உலக பூ பந்து சாம்பியன்ஷிப் பங்கேற்பில் மீது சந்தேகம்

கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் மலேசியா வரலாற்றுச் சாதனை: 8 தங்கம் வென்று அசத்தல்

கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் மலேசியா வரலாற்றுச் சாதனை: 8 தங்கம் வென்று அசத்தல்

தைவான் பொது பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் பியர்லி - தினா ஜோடி தோல்வி; உலக சாம்பியன்ஷிப் தொடருக்குத் தயாராவதாகப் பியர்லி தன் உறுதி

தைவான் பொது பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் பியர்லி - தினா ஜோடி தோல்வி; உலக சாம்பியன்ஷிப் தொடருக்குத் தயாராவதாகப் பியர்லி தன் உறுதி