Sep 21, 2026
Thisaigal NewsYouTube
கிராஸ்ஹாப்பர் கோப்பை: அமினாவை வீழ்த்தி சிவசங்கரி இறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம்
விளையாட்டு

கிராஸ்ஹாப்பர் கோப்பை: அமினாவை வீழ்த்தி சிவசங்கரி இறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.26-

சுவிட்சர்லாந்தின் Zurichசில் நடைபெற்று வரும் Grasshopper Cup 2026 ஸ்குவாஷ் தொடரில், மலேசியாவின் நட்சத்திர வீராங்கனை எஸ். சிவசங்கரி, எகிப்தின் முன்னணி வீராங்கனை Amina Orfiயை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். சுமார் 81 நிமிடங்கள் நீடித்த இந்த விறுவிறுப்பான அரையிறுதி ஆட்டத்தில், முதல் செட்டை வென்ற சிவசங்கரி பின்னர் இரு செட்டுகளை இழந்த போதிலும், விடாமுயற்சியுடன் போராடி 11க்கு 7, 5க்கு 11, 8க்கு 11, 11க்கு 9, 11க்கு 5 என்ற கணக்கில் வெற்றியை வசப்படுத்தினார். கடந்த ஆண்டு இதே தொடரில் இரண்டாம் இடம் பிடித்த சிவசங்கரி, இம்முறை சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் இறுதிப் போட்டியில் ஜப்பானின் Satomi Watanabeவை எதிர்கொள்கிறார்.

Related News