Oct 18, 2026
Thisaigal NewsYouTube

புரோ கபடி லீக் தேதி, இடம் அறிவிப்பு... தமிழ் தலைவாஸ் போட்டி எப்போது?

திசைகள் செய்திப்பிரிவு
Share:
புரோ கபடி லீக் தேதி, இடம் அறிவிப்பு... தமிழ் தலைவாஸ் போட்டி எப்போது?

புரோ கபடி லீக் தொடர் முதல் பகுதி ஆட்டங்கள் ஐதராபாத்தில் அக்டோபர் 18-ம் தேதி முதல் நவம்பர் 9-ம் தேதி வரையும், 2-வது கட்ட ஆட்டங்கள் நொய்டாவில் நவம்பர்10-ம் தேதி முதல் டிசம்பர் 1-ம் தேதி வரையும் நடக்கிறது

கபடியை பிரபலப்படுத்தும் வகையில் இந்தியாவில் புரோ கபடி லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில், புரோ கபடி லீக் இதுவரை 10 சீசன்கள் நடைபெற்று முடிந்துள்ளன. இந்த தொடரின் கடைசி சீசனில் புனேரி பால்டன் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்நிலையில், நடப்பு சாம்பியன் புனேரி பால்டன், பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரட்ஸ், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா, உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் பங்கேற்கும் 11-வது புரோ கபடி லீக் போட்டி அடுத்த மாதம் 18 ஆம் தேதி ஐதராபாத்தில் தொடங்க உள்ளது.

மொத்தம் 3 நகரங்களில் இந்த தொடர் நடத்தப்படுகிறது. முதல் பகுதி ஆட்டங்கள் ஐதராபாத்தில் அக்டோபர் 18-ம் தேதி முதல் நவம்பர் 9-ம் தேதி வரையும், 2-வது கட்ட ஆட்டங்கள் நொய்டாவில் நவம்பர்10-ம் தேதி முதல் டிசம்பர் 1-ம் தேதி வரையும், 3-வது பகுதி லீக் ஆட்டங்கள் புனேயில் டிசம்பர் 3-ம் தேதி முதல் 24-ம் தேதி வரையும் நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அக்டோபர் 18ம் தேதி நடைபெறும் முதல் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் - பெங்களூரு புல்ஸ் அணிகள் மோத உள்ளன. தொடர்ந்து நடைபெறும் 2-வது ஆட்டத்தில் தபாங் டெல்லி - யு மும்பா அணிகள் மோத உள்ளன. தமிழ் தலைவாஸ் அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸை அக்டோபர் 19 ஆம் தேதி எதிர்கொள்ள உள்ளது.

புரோ கபடி லீக் தொடருக்கான வீரர்கள் ஏலம் ஆகஸ்ட் 16,17 தேதிகளில் மும்பையில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் 500-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்ற நிலையில், ஏலத்தில் களமாடிய 12 அணிகள் ரூ.33.7 கோடியை செலவு செய்து 118 வீரர்களை வாங்கியது குறிப்பிடத்தக்கது.

புரோ கபடி லீக் நேரலை ஒளிபரப்பு (லைவ் ஸ்ட்ரீமிங்)

புரோ கபடி லீக் போட்டிகள் இந்தியாவில் உள்ள ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பப்படும் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் நேரலையில் ஒளிபரப்பப்படும்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in விளையாட்டு →