Aug 16, 2026
Thisaigal NewsYouTube
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: லியோங் ஜுன் ஹாவ் அபார வெற்றி; சென் டாங் ஜி - கிளாரிசா சான் ஜோடி வெளியேற்றம்
விளையாட்டு

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: லியோங் ஜுன் ஹாவ் அபார வெற்றி; சென் டாங் ஜி - கிளாரிசா சான் ஜோடி வெளியேற்றம்

Share:

ஜப்பான் ஓபன் 2026 பேட்மிண்டன் தொடரில், மலேசியாவின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு வீரர் லியோங் ஜுன் ஹாவ், தைவானின் சி யு ஜென்-ஐ வீழ்த்தி தனது வெற்றிப் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

டோக்கியோவில் நடைபெற்று வரும் இப்போட்டியின் முதல் சுற்றில், உலகத் தரவரிசையில் 30-வது இடத்தில் உள்ள லியோங் ஜுன் ஹாவ், 19-வது இடத்தில் உள்ள சி யு ஜென்-ஐ 21-19, 21-16 என்ற நேர் செட் கணக்கில் 50 நிமிடப் போராட்டத்திற்குப் பிறகு வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் அவர் இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார். அங்கு அவர் பிரான்சின் கிறிஸ்டோ போப்போவை எதிர்கொள்கிறார்.

கலப்பு இரட்டையர் பிரிவில் பின்னடைவு மறுபுறம், மலேசியாவின் நட்சத்திர வீரர் சென் டாங் ஜி, இளம் வீராங்கனை கிளாரிசா சானுடன் இணைந்து களமிறங்கிய முதல் போட்டியிலேயே தோல்வியைத் தழுவினார். இவர்கள் தைவானின் யாங் போ-சுவான் - ஹு லிங் ஃபாங் ஜோடியிடம் 15-21, 19-21 என்ற கணக்கில் போராடித் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினர். சென் டாங் ஜியின் வழக்கமான பார்ட்னர் தோ ஈ வெய் காயமடைந்த காரணத்தால், இந்தத் தொடரில் மட்டும் அவர் கிளாரிசா சானுடன் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News