Oct 20, 2026
Thisaigal NewsYouTube

இந்திய டி20 அணி.. ஒரு இடத்திற்காக முட்டிமோதும் இந்த 3 வீரர்கள் - பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்?

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இந்திய டி20 அணி.. ஒரு இடத்திற்காக முட்டிமோதும் இந்த 3 வீரர்கள் - பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்?

இலங்கை , ஜூலை 19-

IND vs SL T20 Team India: இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டிகளில் இந்திய அணியின் மிடில் ஆர்டரில் இருக்கும் ஒரு இடத்திற்கு இந்த மூன்று முக்கிய வீரர்கள் கடுமையாக போட்டியளிப்பார்கள். அந்த வகையில், முதல்கட்ட பிளேயிங் லெவன் குறித்த கணிப்பை இங்கு காணலாம்.

சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஓடிஐ தொடர்களை விளையாட உள்ளது. ஜூலை 27, 28, 30 ஆகிய மூன்று நாள்களில் மூன்று டி20 போட்டிகளும், ஆக. 2, 4, 7 ஆகிய மூன்று நாள்களில் மூன்று ஓடிஐ போட்டிகளும் நடைபெறுகின்றன. இந்த தொடர்களுக்கான இந்திய அணியின் ஸ்குவாடுகள் நேற்று பிசிசிஐயால் அறிவிக்கப்பட்டன.

ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு நடைபெறும் முக்கிய வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் என்பதால் சீனியர் வீரர்கள் பலர் இந்த சுற்றுப்பயணத்தில் இடம்பெற்றுள்ளனர். அதிலும் குறிப்பாக சர்வதேச டி20 அரங்கில் இருந்து ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா ஆகியோர் ஓய்வை அறிவித்ததால் சீனியர் - ஜூனியர் கலவையுடன் டி20 ஸ்குவாட் அறிவிக்கப்பட்டுள்ளது.

விராட்டுக்கு பின் சுப்மான் கில்...

அதிலும் டி20 உலகக் கோப்பையில் துணை கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா இந்த தொடரில் துணை கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும், ரோஹித் சர்மாவின் கேப்டன்ஸி தற்போது சூர்யகுமார் யாதவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. துணை கேப்டன் பொறுப்பை சுப்மான் கில் பெற்றுள்ளார். சுப்மான் கில் ஓடிஐ தொடரிலும் துணை கேப்டன் பொறுப்பை பெற்றிருக்கிறார். விராட் கோலிக்கு பின்னர் ஒரு பெரும் நட்சத்திரமாக கில்லை வளர்த்தெடுக்க பிசிசிஐ திட்டமிடுவதாக விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in விளையாட்டு →