Sep 22, 2026
Thisaigal NewsYouTube
தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவு
தமிழ் பள்ளி

தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவு

Share:

தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கும், மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்கும், பள்ளிகளின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கும் தொடர்ந்து ஆதரவு வழங்கப்படும் என பிரதமரின் தம்பூன் நாடாளுமன்றத் தொகுதி சிறப்பு அதிகாரி டத்தோ சுரேஸ்குமார் தெரிவித்துள்ளார்.

ஈப்போவில் உள்ள ஏ.கே.எஸ். மண்டபத்தில் தஞ்சோங் ரம்புத்தான் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் ஏற்பாடு செய்த நிதி திரட்டும் விருந்தில் பேசிய அவர், கடந்த நான்கு ஆண்டுகளில் தம்பூன் தொகுதிக்குட்பட்ட ஐந்து தமிழ்ப்பள்ளிகளின் பல்வேறு தேவைகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

சில பள்ளிகளின் நிலம் மற்றும் பட்டா பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதுடன், புதிய கட்டிடங்களுக்கான பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சத்திய சீலா தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டிடத்துக்கு அனுமதி கிடைத்துள்ளதால், அடுத்த ஆண்டு கட்டுமானப் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என டத்தோ சுரேஸ்குமார் திசைகளிடம் விவரித்தார்.

இதனிடையே, சுமார் 50 ஆண்டுகள் பழமையான தஞ்சோங் ரம்புத்தான் தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டிடம் தொடர்பான ஆய்வு நடைபெற்று வருவதாக டத்தோ சுரேஸ்குமார் தெரிவித்தார். பள்ளியின் வளர்ச்சிக்காக தம்பூன் நாடாளுமன்றத் தொகுதி சார்பில் 40 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவியும் வழங்கப்பட்டது.

பள்ளியின் தலைமையாசிரியை சுந்தரி சண்முகதாஸ் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிதி திரட்டும் நிகழ்விற்கு ஆதரவு நல்கிய அனைத்து தரப்பினருக்கும் அவர் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

பள்ளியின் தேவைகளுக்கும் எதிர்கால வளர்ச்சிக்கும் தொடர்ந்து உதவிகள் தேவைப்படுவதாக அவர் விளக்கினார்.

Related News

பினாங்கு ராமதாசர் தமிழ்ப்பள்ளியில் 50 ஆயிரம் ரிங்கிட் மதிப்பில்  ‘மேக்கர் லேப்’ திறப்பு

பினாங்கு ராமதாசர் தமிழ்ப்பள்ளியில் 50 ஆயிரம் ரிங்கிட் மதிப்பில் ‘மேக்கர் லேப்’ திறப்பு

சிரம்பான் லோரொங் ஜாவா தமிழ்ப்பள்ளி புதிய கேன்டீன் கட்டுமானம்: லீ அறவாரியம் 2 லட்சம் நிதியுதவி

சிரம்பான் லோரொங் ஜாவா தமிழ்ப்பள்ளி புதிய கேன்டீன் கட்டுமானம்: லீ அறவாரியம் 2 லட்சம் நிதியுதவி

சிலாங்கூர் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு தலா 300 ரிங்கிட் போக்குவரத்து உதவி: 3,452 மாணவர்கள் பயனடைந்தனர்

சிலாங்கூர் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு தலா 300 ரிங்கிட் போக்குவரத்து உதவி: 3,452 மாணவர்கள் பயனடைந்தனர்

புக்கிட் செலாரோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி வளர்ச்சிக்கு முன்னாள் மாணவர்கள் கரம் கோர்ப்பு! — 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

புக்கிட் செலாரோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி வளர்ச்சிக்கு முன்னாள் மாணவர்கள் கரம் கோர்ப்பு! — 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

பிரதமர் பதவிக் கால வரம்பு மசோதா: அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்வதா? அன்வாரே முடிவு செய்ய வேண்டும்

பிரதமர் பதவிக் கால வரம்பு மசோதா: அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்வதா? அன்வாரே முடிவு செய்ய வேண்டும்

கம்போங் பண்டான் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

கம்போங் பண்டான் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது