Oct 18, 2026
Thisaigal NewsYouTube

பிரதமர் பதவிக் கால வரம்பு மசோதா: அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்வதா? அன்வாரே முடிவு செய்ய வேண்டும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பிரதமர் பதவிக் கால வரம்பு மசோதா: அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்வதா? அன்வாரே முடிவு செய்ய வேண்டும்

பிரதமரின் பதவிக் காலத்தை 10 ஆண்டுகளுக்கு மட்டுப்படுத்தும் மசோதா, மக்களவையில் இரண்டாவது வாசிப்புக்குத் தயாராக இருப்பதாக சட்ட சீர்திருத்தத்திற்கான பிரதமர்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அஸலினா ஒத்மான் சைட் தெரிவித்துள்ளார்.

எனினும், எதிர்வரும் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தில் இந்த மசோதாவை வாக்கெடுப்புக்கு கொண்டுவருவதா என்பதை, அவைத் தலைவரான பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முடிவு செய்வார் என அவர் கூறினார்.

இந்த மசோதா கூட்டரசு அரசியலமைப்பில் திருத்தம் செய்வதை உள்ளடக்கியதால், நிறைவேற்ற மக்களவையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவைப்படுகிறது.

கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி முதன்முறையாக தாக்கல் செய்யப்பட்ட இம்மசோதா, மார்ச் 2ஆம் தேதி இரண்டாவது வாசிப்பின்போது தேவையான பெரும்பான்மையைப் பெறத் தவறியது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தமிழ் பள்ளி →
தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவு

தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவு

பினாங்கு ராமதாசர் தமிழ்ப்பள்ளியில் 50 ஆயிரம் ரிங்கிட் மதிப்பில்  ‘மேக்கர் லேப்’ திறப்பு

பினாங்கு ராமதாசர் தமிழ்ப்பள்ளியில் 50 ஆயிரம் ரிங்கிட் மதிப்பில் ‘மேக்கர் லேப்’ திறப்பு

சிரம்பான் லோரொங் ஜாவா தமிழ்ப்பள்ளி புதிய கேன்டீன் கட்டுமானம்: லீ அறவாரியம் 2 லட்சம் நிதியுதவி

சிரம்பான் லோரொங் ஜாவா தமிழ்ப்பள்ளி புதிய கேன்டீன் கட்டுமானம்: லீ அறவாரியம் 2 லட்சம் நிதியுதவி

சிலாங்கூர் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு தலா 300 ரிங்கிட் போக்குவரத்து உதவி: 3,452 மாணவர்கள் பயனடைந்தனர்

சிலாங்கூர் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு தலா 300 ரிங்கிட் போக்குவரத்து உதவி: 3,452 மாணவர்கள் பயனடைந்தனர்

புக்கிட் செலாரோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி வளர்ச்சிக்கு முன்னாள் மாணவர்கள் கரம் கோர்ப்பு! — 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

புக்கிட் செலாரோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி வளர்ச்சிக்கு முன்னாள் மாணவர்கள் கரம் கோர்ப்பு! — 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கம்போங் பண்டான் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

கம்போங் பண்டான் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது