Oct 18, 2026
Thisaigal NewsYouTube

கம்போங் பண்டான் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கம்போங் பண்டான் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

கோலாலம்பூர், கம்போங் பண்டான் தேசிய வகை தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி சனிக்கிழமை மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை பண்டான் மாஸ் 2 அடுக்குமாடி குடியிருப்பு மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வு ஏற்பாட்டுக் குழுத் தலைவர் B. நவேந்திரன் தலைமையில் முன்னாள் மாணவர் சங்கத்தின் துணைத் தலைவர் பார்த்திபன் இராமச்சந்திரனின் சிறப்பு வருகையுடன் நடைபெற்ற இச்சந்திப்பில் 40க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

முன்னாள் மாணவர்கள் தங்களின் பள்ளிப் பருவ நினைவுகளை மீட்டெடுத்து பகிர்ந்து கொள்வதுடன், பள்ளித் தோழமையை மீண்டும் புதுப்பித்து, ஒருவருக்கொருவர் தொடர்பையும் நட்புறவையும் தொடர்ந்து பேணும் நோக்கில் இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாக, 1993ஆம் ஆண்டு இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவரும் நிகழ்வு ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான நவேந்திரன் தெரிவித்தார்.

பல ஆண்டுகளுக்குப் பின்னர் முன்னாள் பள்ளித் தோழர்களை ஒரே இடத்தில் சந்தித்து, தங்களது இளமைப் பருவ நினைவுகளைப் பகிர்ந்து கொண்டது அனைவருக்கும் மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியதாக நவேந்திரன் விவரித்தார்.

1965ஆம் ஆண்டில் இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் கூட இச்சந்திப்பில் கலந்து கொண்டது தமக்கு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும், பல ஆண்டுகளுக்குப் பின்னரும் பள்ளித் தோழமை தொடர்ந்து நீடிப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், 2004ஆம் ஆண்டு இப்பள்ளியில் பயின்று தற்போது சிங்கப்பூரில் பணியாற்றி வரும் ரூபன் கிருஷ்ணன் தெரிவித்தார்.

நிகழ்வில் கலந்துகொண்டு, நீண்ட காலத்துக்குப் பிறகு பழைய நட்பு வட்டாரங்களை மீண்டும் சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் அளிப்பதாக 1993ஆம் ஆண்டு கம்போங் பண்டான் பள்ளியில் பயின்ற கேத்ரின் ராஜமாணிக்கம் தெரிவித்தார்.

தாம் 2013 ஆம் ஆண்டு வரை இப்பள்ளியில் பயின்றிருந்தாலும், தமக்கு முன்பு இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் பகிர்ந்துகொள்ளும் பழைய நினைவுகளைக் கேட்கும்போது, தமது பள்ளிப் பருவ அனுபவங்களையும் அவற்றுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் வாய்ப்பு கிடைப்பது மகிழ்ச்சியளிப்பதாக திவ்யாஸ்ரீ ரகுநாதன் தெரிவித்தார்.

பழைய மாணவர்கள் ஒன்றுக்கூடியது பார்ப்பதற்கு மகிழ்ச்சியை அளிக்கிறது என்றாலும், தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு உதவும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று 1987 இல் பயின்ற முன்னாள் மாணவர் முனியாண்டி பொன்னுசாமி பரிந்துரை செய்தார்.

ஆண்டுகள் பல கடந்தாலும், பள்ளிப் பருவ நட்புகளும் நினைவுகளும் மனதைவிட்டு மறைவதில்லை. கம்போங் பாண்டான் தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, காலத்தால் அழியாத அந்த இனிய நினைவுகளை மீண்டும் உயிர்ப்பித்து, நட்பின் பாசத்தை நெஞ்சில் நிறைத்துச் சென்ற ஒரு நெகிழ்ச்சியான தருணமாக அமைந்தது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தமிழ் பள்ளி →
தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவு

தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவு

பினாங்கு ராமதாசர் தமிழ்ப்பள்ளியில் 50 ஆயிரம் ரிங்கிட் மதிப்பில்  ‘மேக்கர் லேப்’ திறப்பு

பினாங்கு ராமதாசர் தமிழ்ப்பள்ளியில் 50 ஆயிரம் ரிங்கிட் மதிப்பில் ‘மேக்கர் லேப்’ திறப்பு

சிரம்பான் லோரொங் ஜாவா தமிழ்ப்பள்ளி புதிய கேன்டீன் கட்டுமானம்: லீ அறவாரியம் 2 லட்சம் நிதியுதவி

சிரம்பான் லோரொங் ஜாவா தமிழ்ப்பள்ளி புதிய கேன்டீன் கட்டுமானம்: லீ அறவாரியம் 2 லட்சம் நிதியுதவி

சிலாங்கூர் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு தலா 300 ரிங்கிட் போக்குவரத்து உதவி: 3,452 மாணவர்கள் பயனடைந்தனர்

சிலாங்கூர் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு தலா 300 ரிங்கிட் போக்குவரத்து உதவி: 3,452 மாணவர்கள் பயனடைந்தனர்

புக்கிட் செலாரோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி வளர்ச்சிக்கு முன்னாள் மாணவர்கள் கரம் கோர்ப்பு! — 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

புக்கிட் செலாரோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி வளர்ச்சிக்கு முன்னாள் மாணவர்கள் கரம் கோர்ப்பு! — 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

பிரதமர் பதவிக் கால வரம்பு மசோதா: அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்வதா? அன்வாரே முடிவு செய்ய வேண்டும்

பிரதமர் பதவிக் கால வரம்பு மசோதா: அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்வதா? அன்வாரே முடிவு செய்ய வேண்டும்