Sep 12, 2026
Thisaigal NewsYouTube
தமிழ், சீனப்பள்ளிகளுக்கான சிறப்பு நிதி 2 வாரங்களில் அறிவிப்பு — அன்வார் உறுதி
தமிழ் பள்ளி

தமிழ், சீனப்பள்ளிகளுக்கான சிறப்பு நிதி 2 வாரங்களில் அறிவிப்பு — அன்வார் உறுதி

Share:

தமிழ்ப்பள்ளிகள் மற்றும் சீனப்பள்ளிகளுக்கான கூட்டரசு அரசாங்கத்தின் சிறப்பு நிதி தொடர்பான முழு விவரங்கள் இன்னும் இரண்டு வாரங்களில் அறிவிக்கப்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

மலாக்காவில் நடைபெற்ற மடானி திருவிழா நிகழ்ச்சியில் உரையாற்றிய அன்வார், நாட்டில் உள்ள அனைத்து சமூகங்களின் தேவைகளும், பல்வேறு கல்வி முறைகளின் தேவைகளும் நியாயமான முறையில் கவனிக்கப்படும் என உறுதியளித்தார். அதேவேளையில் எந்தவொரு சமூகமும் புறக்கணிக்கப்படாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இஸ்லாமிய கல்வி நிறுவனங்களுக்கு அரசாங்கம் கூடுதல் உதவிகளை வழங்குவது, தமிழ்ப்பள்ளிகள் மற்றும் சீனப்பள்ளிகளை புறக்கணிப்பதாக அர்த்தமல்ல எனவும் அன்வார் தெளிவுபடுத்தினார். இப்பள்ளிகளுக்கான உதவிகள் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு சுமார் இரண்டு வாரங்களில் கோலாலம்பூரில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

தாம் 2022-ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பின்னர், நீண்ட காலமாக போதிய உதவிகள் கிடைக்காமல் இருந்த போண்டோக் மற்றும் தாஃபிஸ் பள்ளிகளுக்கு 2023-ஆம் ஆண்டு முதல் அரசாங்க உதவிகள் மீண்டும் வழங்கப்பட்டதாகவும், 2024-ஆம் ஆண்டில் அந்த உதவிகள் மேலும் அதிகரிக்கப்பட்டதாகவும் அன்வார் கூறினார்.

மேலும், போண்டோக் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதுடன், மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு மற்றும் கணினிப் பயிற்சிகளை அறிமுகப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

மற்ற கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில், போண்டோக் பள்ளிகள் பின்தங்குவதை அனுமதிக்க முடியாது என்றும் அன்வார் வலியுறுத்தினார்.

Related News

பினாங்கு ராமதாசர் தமிழ்ப்பள்ளியில் 50 ஆயிரம் ரிங்கிட் மதிப்பில்  ‘மேக்கர் லேப்’ திறப்பு

பினாங்கு ராமதாசர் தமிழ்ப்பள்ளியில் 50 ஆயிரம் ரிங்கிட் மதிப்பில் ‘மேக்கர் லேப்’ திறப்பு

சிரம்பான் லோரொங் ஜாவா தமிழ்ப்பள்ளி புதிய கேன்டீன் கட்டுமானம்: லீ அறவாரியம் 2 லட்சம் நிதியுதவி

சிரம்பான் லோரொங் ஜாவா தமிழ்ப்பள்ளி புதிய கேன்டீன் கட்டுமானம்: லீ அறவாரியம் 2 லட்சம் நிதியுதவி

சிலாங்கூர் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு தலா 300 ரிங்கிட் போக்குவரத்து உதவி: 3,452 மாணவர்கள் பயனடைந்தனர்

சிலாங்கூர் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு தலா 300 ரிங்கிட் போக்குவரத்து உதவி: 3,452 மாணவர்கள் பயனடைந்தனர்

புக்கிட் செலாரோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி வளர்ச்சிக்கு முன்னாள் மாணவர்கள் கரம் கோர்ப்பு! — 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

புக்கிட் செலாரோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி வளர்ச்சிக்கு முன்னாள் மாணவர்கள் கரம் கோர்ப்பு! — 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

பிரதமர் பதவிக் கால வரம்பு மசோதா: அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்வதா? அன்வாரே முடிவு செய்ய வேண்டும்

பிரதமர் பதவிக் கால வரம்பு மசோதா: அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்வதா? அன்வாரே முடிவு செய்ய வேண்டும்

கம்போங் பண்டான் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

கம்போங் பண்டான் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது