Sep 11, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு ராமதாசர் தமிழ்ப்பள்ளியில் 50 ஆயிரம் ரிங்கிட் மதிப்பில்  ‘மேக்கர் லேப்’ திறப்பு
தமிழ் பள்ளி

பினாங்கு ராமதாசர் தமிழ்ப்பள்ளியில் 50 ஆயிரம் ரிங்கிட் மதிப்பில் ‘மேக்கர் லேப்’ திறப்பு

Share:

மாணவர்களின் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கலை மற்றும் கணிதம் சார்ந்த திறன்களை மேம்படுத்தும் நோக்கில், பினாங்கு ராமதாசர் தமிழ்ப் பள்ளியில் புதிய ‘மேக்கர் லேப்’ எனப்படும் ஸ்டெம் ரூம் (STEM Room) திறக்கப்பட்டது.

மாணவர்களின் கல்வி கற்றலை மேலும் சுவாரஸ்யமானதாகவும், செய்முறை சார்ந்ததாகவும் மாற்றும் வகையில் இந்த ‘மேக்கர் லேப்’ அமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாணவர்கள் வகுப்பறையில் கற்றுக் கொள்ளும் அறிவை நடைமுறைச் செயல்பாடுகளுடன் இணைத்துக் கொள்ளும் வாய்ப்பைப் பெறுகின்றனர் என்று அப்பள்ளியின் தலைமையாசிரியர் வினோத் துலுக்கானம்தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் தங்களது சிந்தனைகளைச் செயல்வடிவமாக மாற்றுவதற்கும், புதிய யோசனைகளை உருவாக்குவதற்கும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான செய்முறை அனுபவங்களைப் பெறுவதற்கும் இந்த ‘மேக்கர் லேப்’ உதவியாக இருக்கும் என்றும் வினோத் துலுக்கானம் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விழாவில் பில்-ஓரியண்ட் லோஜிஸ்திக் குருப் நிறுவனத்தைச் சேர்ந்த நிர்வாக இயக்குனர் என். ஜெய் சங்கர் தம்பையா மற்றும் புரோலிஃபிக் கார்கோ செர்விசஸ் (பிஜி) செண்டிரியான் பெர்ஹாட் நிறுவனத்தைச் நிர்வாக இயக்குனர் ராஜன் பச்சமுத்து ஆகியோர் கலந்து கொண்டு புதிய ‘மேக்கர் லேப்’பை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தனர்.

சுமார் 50 ஆயிரம் ரிங்கிட் செலவில் நிர்வாகிக்கப்பட்ட புதிய ஸ்டெம் அறைக்கான மொத்த செலவுகளை மேல் குறிப்பிட்ட நிறுவனம் ஏற்றுக் கொண்டனர்.

இதன் மூலம் மாணவர்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பாடமாக மட்டுமின்றி, செய்முறை அனுபவத்தின் வாயிலாகவும் கற்றுக் கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது.

இது குறித்து புரோலிஃபிக் கார்கோ செர்விசஸ் நிறுவனத்தின் இயக்குநர் பி. தியாகராஜன் கூறுகையில், அதிவேகமாக வளர்ந்து செயற்கை நுண்ணறிவு காலத்தில் மாணவர்களில் அவற்றிற்கு இணையாக தொழில்நுட்பத்தில் மேம்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

இதனிடையே பில் ஓரியண்ட் லோஜிஸ்திக் குருப் நிறுவனத்தின் இயக்குநர் டி. ஜெய் ஷங்கர் கூறுகையில், மாணவர்களிடம் அறிவியல் ஆர்வம், தொழில் நுட்ப அறிவு, பொறியியல் சிந்தனை, கலைத்திறன் மற்றும் கணிதத் திறன் ஆகியவற்றை ஒருங்கிணைத்து வளர்ப்பதற்கு இந்த மையம் உதவும் என்று தெரிவித்தார்.

மேலும், மாணவர்கள் குழுவாக இணைந்து சிந்திப்பது, புதிய யோசனைகளைப் பகிர்ந்து கொள்வது, பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது மற்றும் தங்களது படைப்பாற்றலை வெளிப்படுத்துவது போன்ற திறன்களையும் வளர்த்துக் கொள்ள இந்த ‘மேக்கர் லேப்’ ஒரு சிறந்த தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related News

சிரம்பான் லோரொங் ஜாவா தமிழ்ப்பள்ளி புதிய கேன்டீன் கட்டுமானம்: லீ அறவாரியம் 2 லட்சம் நிதியுதவி

சிரம்பான் லோரொங் ஜாவா தமிழ்ப்பள்ளி புதிய கேன்டீன் கட்டுமானம்: லீ அறவாரியம் 2 லட்சம் நிதியுதவி

சிலாங்கூர் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு தலா 300 ரிங்கிட் போக்குவரத்து உதவி: 3,452 மாணவர்கள் பயனடைந்தனர்

சிலாங்கூர் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு தலா 300 ரிங்கிட் போக்குவரத்து உதவி: 3,452 மாணவர்கள் பயனடைந்தனர்

புக்கிட் செலாரோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி வளர்ச்சிக்கு முன்னாள் மாணவர்கள் கரம் கோர்ப்பு! — 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

புக்கிட் செலாரோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி வளர்ச்சிக்கு முன்னாள் மாணவர்கள் கரம் கோர்ப்பு! — 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

பிரதமர் பதவிக் கால வரம்பு மசோதா: அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்வதா? அன்வாரே முடிவு செய்ய வேண்டும்

பிரதமர் பதவிக் கால வரம்பு மசோதா: அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்வதா? அன்வாரே முடிவு செய்ய வேண்டும்

கம்போங் பண்டான் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

கம்போங் பண்டான் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

லாட்டரி கடை முன்பு மூதாட்டி தீ வைக்கப்பட்ட சம்பவம்: தகவல் தருவோருக்கு 5000 ரிங்கிட் வெகுமதி

லாட்டரி கடை முன்பு மூதாட்டி தீ வைக்கப்பட்ட சம்பவம்: தகவல் தருவோருக்கு 5000 ரிங்கிட் வெகுமதி