Nov 5, 2026
Thisaigal NewsYouTube

தெலுக் இந்தானில் 11 தமிழ்ப்பள்ளிகளுக்கு 14 லட்சம் வெள்ளி நிதி ஒதுக்கீடு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தெலுக் இந்தானில் 11 தமிழ்ப்பள்ளிகளுக்கு 14 லட்சம் வெள்ளி நிதி ஒதுக்கீடு

தீபாவளித் திருநாளை முன்னிட்டு, தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதியின் கீழுள்ள 11 தமிழ்ப்பள்ளிகளுக்கு மொத்தம் 14 லட்சம் வெள்ளி நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்திய மாணவர்களுக்கு தீபாவளி உதவியாகத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு தலா ஆயிரம் வெள்ளியும், இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கு 1,200 வெள்ளியும், பல்கலைக்கழக மாணவர்களுக்கு 2,000 வெள்ளியும் ரொக்கமாக வழங்கப்பட்டதாக பாசீர் பெடாமார் சட்டமன்ற உறுப்பினர் வூ கா லியோங் தெரிவித்தார்.

தீபாவளியை முன்னிட்டு மாணவர்களுக்கும் குடும்பங்களுக்கும் வழங்கப்பட்ட மொத்த ரொக்க உதவி சுமார் 4 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி என்றார்.

தெலுக் இந்தானில் கீழ் பேரா மாவட்டக் கல்வி அலுவலக மண்டபத்தில் நடைபெற்ற 11 தமிழ்ப்பள்ளிகளுக்கான நிதி வழங்கும் நிகழ்ச்சியில், அமைச்சர் ஙா கோர் மிங்கின் சார்பிலும் அரசாங்கத்தின் சார்பிலும் நிதியை வழங்கிய பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், தமிழ்ப்பள்ளிகளின் தேவைகளை நேரடியாக அறிந்து, அவற்றுக்கு ஏற்றவாறு நிதி ஒதுக்கப்படுவதாகவும், இம்முயற்சிகள் இன வேறுபாடின்றி அனைத்து மக்களுக்கும் சமமான ஆதரவு வழங்கப்பட வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் முன்னெடுக்கப்படுவதாகவும் வூ கா லியோங் குறிப்பிட்டார்.

தெலுக் இந்தான் எம்.பி. ங்கா கோர் மிங் மற்றும் பாசீர் பெடாமார் சட்டமன்ற உறுப்பினர் வூ கா லியோங் வழங்கி வரும் இந்த நிதி உதவியானது, தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மற்றும் தமிழ்ப்பள்ளிகள் வளர்ச்சிக்கு பேருதவியாக இருப்பதாக கீழ் பேரா மாவட்ட தமிழ்ப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர் மன்றத் தலைவர் ஸ்ரீ முருகன் தெரிவித்தார்.

இதன் மூலம், தெலுக் இந்தான் தொகுதியில் தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கும் இந்திய மாணவர்களின் கல்வி மற்றும் நலனுக்கும் தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாக சிதம்பரம் பிள்ளை தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியருமான ஸ்ரீ முருகன் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தமிழ் பள்ளி →
தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவு

தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவு

பினாங்கு ராமதாசர் தமிழ்ப்பள்ளியில் 50 ஆயிரம் ரிங்கிட் மதிப்பில்  ‘மேக்கர் லேப்’ திறப்பு

பினாங்கு ராமதாசர் தமிழ்ப்பள்ளியில் 50 ஆயிரம் ரிங்கிட் மதிப்பில் ‘மேக்கர் லேப்’ திறப்பு

சிரம்பான் லோரொங் ஜாவா தமிழ்ப்பள்ளி புதிய கேன்டீன் கட்டுமானம்: லீ அறவாரியம் 2 லட்சம் நிதியுதவி

சிரம்பான் லோரொங் ஜாவா தமிழ்ப்பள்ளி புதிய கேன்டீன் கட்டுமானம்: லீ அறவாரியம் 2 லட்சம் நிதியுதவி

சிலாங்கூர் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு தலா 300 ரிங்கிட் போக்குவரத்து உதவி: 3,452 மாணவர்கள் பயனடைந்தனர்

சிலாங்கூர் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு தலா 300 ரிங்கிட் போக்குவரத்து உதவி: 3,452 மாணவர்கள் பயனடைந்தனர்

புக்கிட் செலாரோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி வளர்ச்சிக்கு முன்னாள் மாணவர்கள் கரம் கோர்ப்பு! — 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

புக்கிட் செலாரோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி வளர்ச்சிக்கு முன்னாள் மாணவர்கள் கரம் கோர்ப்பு! — 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

பிரதமர் பதவிக் கால வரம்பு மசோதா: அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்வதா? அன்வாரே முடிவு செய்ய வேண்டும்

பிரதமர் பதவிக் கால வரம்பு மசோதா: அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்வதா? அன்வாரே முடிவு செய்ய வேண்டும்