Oct 16, 2025
Thisaigal NewsYouTube
பினாங்கு மாநில 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 20 லட்சத்து 50 ஆயிரத்து 100 ரிங்கிட் மானியம் – பினாங்கு அரசு வழங்கியது
தமிழ் பள்ளி

பினாங்கு மாநில 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 20 லட்சத்து 50 ஆயிரத்து 100 ரிங்கிட் மானியம் – பினாங்கு அரசு வழங்கியது

Share:

ஜார்ஜ்டவுன், ஜூலை.25-

பினாங்கு மாநிலத்தில் செயல்படும் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கும், 14 தமிழ் பாலர்பள்ளிகளுக்கும் மாநில அரசு மொத்தம் 20 லட்சத்து 50 ஆயிரத்து 100 ரிங்கிட்டை மானியமாக வழங்கியது.

அத்துடன் பினாங்கு மாநிலத்தில் செயல்படும் 3 பஞ்சாபி மொழிக் கல்விக் கூடங்களுக்கு தலா 40 ஆயிரம் ரிங்கிட் என ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரிங்கிட்டும், முதல் முறையாக ஒரு தெலுங்கு பள்ளிக்கு 20 ஆயிரம் ரிங்கிட்டும் On-Off முறையில் மானியம் வழங்கப்பட்டுள்ளதாக பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு தெரிவித்தார்.

எஞ்சியுள்ள 2 லட்சத்து 29 ஆயிரம் ரிங்கிட் தொகை, தமிழ்ப்பள்ளிகளுக்கான சிறப்பு நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தத்தில் இவ்வாண்டு 24 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட், பினாங்கு அரசு மானியமாக ஒதுக்கியதாக பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிளின் சிறப்பு நடவடிக்கைக் குழுத் தலைவருமான டத்தோஸ்ரீ சுந்தராஜு தெரிவித்தார்.

28 தமிழ்ப்பள்ளிகள், 3 பஞ்சாபி மொழிப்பள்ளிகள் மற்றும் ஒரு தெலுங்குப் பள்ளிக்கு 2025 ஆம் ஆண்டுக்கான மானியம் வழங்கும் நிகழ்வு இன்று பிற்பகல் 3 மணியளவில் கோம்தார் கட்டடத்தின் 5 ஆவது மாடியில் உள்ள ஆடிட்டோரியத்தில் பினாங்கு முதலமைச்சர் சோவ் கோன் யோவ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த வருடாந்திர மானியம், சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு ரொக்கப் பணமாகக் கொடுக்கப்படாமல், அவற்றுக்கு தேவைப்படக்கூடிய உபகரணங்கள் வாங்குவதற்கும் மற்றும் பள்ளி அடிப்படை வசதிகளை மேம்படுத்திக் கொள்வதற்கும் இந்த தொகை செலவிடப்படுவதாக டத்தோஸ்ரீ சுந்தராஜு தெரிவித்தார்.

பாகன் டாலாம் சட்டமன்ற உறுப்பினரும், பினாங்கு தமிழ்ப்பள்ளியின் சிறப்பு நடவடிக்கைக் குழுவின் துணைத் தலைவருமான குமரன் கிருஷ்ணன் கூறுகையில், ஒவ்வொரு தமிழ்ப்பள்ளிக்கும் நேரில் சென்று பார்வையிட்டு, அதன் அடிப்படை தேவைகள் குறித்து பள்ளி நிர்வாகத்துடன் கலந்து ஆலோசித்தப் பின்னர் சிறப்பு நடவடிக்கைக் குழு மூலம் மூன்று கூட்டங்களில் விரிவாக மதிப்பீடு செய்தப் பின்னரே இந்த மானியத் தொகை அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றார்.

மானியம் வழங்கும் இந்த நிகழ்வில் பள்ளித் தலைமையாசிரியர்கள், பள்ளி வாரிய உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்கள் திரளாகக் கலந்து சிறப்பித்தனர்.

Related News

வட கிந்தா மாவட்ட அளவில் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு இடையே கால்பந்து போட்டி

வட கிந்தா மாவட்ட அளவில் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு இடையே கால்பந்து போட்டி

பண்டார் ஸ்பிரிங் ஹில் தமிழ்ப்பள்ளிக்கு ரிம.450,000 நிதி உதவி

பண்டார் ஸ்பிரிங் ஹில் தமிழ்ப்பள்ளிக்கு ரிம.450,000 நிதி உதவி

தமிழ்ப்பள்ளிகள் பராமரிப்புக்கு 19.09 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு: குறைந்த மாணவர்கள் கொண்ட பள்ளிகள் மூடப்படாது

தமிழ்ப்பள்ளிகள் பராமரிப்புக்கு 19.09 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு: குறைந்த மாணவர்கள் கொண்ட பள்ளிகள் மூடப்படாது

தாமான் மெலாவத்தி தமிழ்ப்பள்ளியின் வருடாந்திர விளையாட்டுப் போட்டியில் டான் ஶ்ரீ ஜெகதீசன் பங்கேற்பு

தாமான் மெலாவத்தி தமிழ்ப்பள்ளியின் வருடாந்திர விளையாட்டுப் போட்டியில் டான் ஶ்ரீ ஜெகதீசன் பங்கேற்பு

380 தமிழ்ப்பள்ளிகள் குறைந்த மாணவர்கள் பட்டியலில் இருக்கின்றன!

380 தமிழ்ப்பள்ளிகள் குறைந்த மாணவர்கள் பட்டியலில் இருக்கின்றன!

இனி புதிய பாதைக்கு மலேசியத் தமிழ்ப்பள்ளிகள்: முன்னாள் மாணவர் சங்கத்தினரின் தேசிய மாநாட்டில் அதிரடித் திட்டங்கள்!

இனி புதிய பாதைக்கு மலேசியத் தமிழ்ப்பள்ளிகள்: முன்னாள் மாணவர் சங்கத்தினரின் தேசிய மாநாட்டில் அதிரடித் திட்டங்கள்!

பினாங்கு மாநில 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 20 லட்சத்து 50 ஆயிர... | Thisaigal News