கோலாலம்பூர், ஜனவரி.14-
புருணை சுல்தான், Sultan Hassanal Bolkiah Mu’izzaddin Waddaulah அவர்கள் விரைவில் பூரண நலம் பெற மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்.
புருணை சுல்தான் அவர்கள் முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில், அவர் விரைவில் முழு ஆரோக்கியத்துடன் குணமடையத் தானும் தனது குடும்பத்தினரும் இறைவனைப் பிரார்த்திப்பதாக மாமன்னர் தெரிவித்துள்ளார்.
மலேசியா மற்றும் புருணை ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் மிக நெருக்கமான மற்றும் சகோதரத்துவ உறவை மாமன்னரின் இந்த வாழ்த்துச் செய்தி மீண்டும் பிரதிபலிக்கிறது.
புருணை சுல்தான் அவர்கள் தென்கிழக்கு ஆசியாவின் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவராகவும், மலேசிய அரச குடும்பத்தினருடன் மிக நெருங்கிய நட்பு கொண்டவராகவும் விளங்குவது குறிப்பிடத்தக்கது. மாமன்னரின் இந்தச் செய்தி இரு நாட்டு மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.








