Sep 22, 2026
Thisaigal NewsYouTube
பசுமைப் புரட்சி: மூன்று அனைத்துலக விருதுகளை வென்று பூச்சோங் மாணவர்கள் சாதனை
தமிழ் பள்ளி

பசுமைப் புரட்சி: மூன்று அனைத்துலக விருதுகளை வென்று பூச்சோங் மாணவர்கள் சாதனை

Share:

சைபர்ஜெயா, பிப்ரவரி.21-

சுற்றுச்சூழல் சார்ந்த பசுமைப் கண்டுபிடிப்புகளுக்காக மூன்று அனைத்துலகப் போட்டிகளில் முதலிடம் பிடித்து, நான்கு மலேசியத் தொடக்கப்பள்ளி மாணவர்கள் நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

பூச்சோங், கின்ராரா தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 11 வயது ஆர்த்திஷா தீபன், ஆதிஷா மூர்த்தி, கேஷ்வினி அரவின் குமார் மற்றும் பூரணி விவேகன் ஆகிய நால்வரே இந்தச் சாதனையாளர்கள் ஆவர்

சைபர்ஜெயாவிலுள்ள மல்டிமீடியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 'உலகளாவிய நிலையான வளர்ச்சி இலக்கின் சவால்' எனும் போட்டியில் தங்க விருதை வென்று இவர்கள் சாதனைப் படைத்துள்ளனர்.

தேசிய அறிவியல் மையம் மற்றும் சிரிம் (SIRIM) ஆதரவுடன் நடைபெற்ற 'உலகளாவிய ஸ்டெம் (STEM) புத்தாக்கப் ' போட்டியில் சாம்பியன் பட்டத்தையும் இவர்கள் வென்றனர்.

இந்த மாதம் தொடக்கத்தில் தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் நடைபெற்ற 'மலேசிய இளம் விஞ்ஞானிகள் அமைப்பு' போட்டியில் இவர்கள் தங்கம் வென்றனர். இதில் சுமார் 92 அணிகள் மற்றும் 1,000 பங்கேற்பாளர்களுக்கு மத்தியில் இவர்கள் தனித்து விளங்கினர்.

வெப்பமான காலநிலைக்கு ஏற்ற ஆரோக்கியமான மற்றும் இயற்கையான பானத்தை இவர்கள் அறிமுகப்படுத்தினர். இது உள்ளூர் செம்பருத்திப் பூக்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது.

அதே வேளையில் பேங்காக் போட்டியில், வீட்டிலேயே மூலிகைச் செடிகளை வளர்ப்பதற்கான மட்கும் தன்மையுடைய பொருட்களைப் பயன்படுத்திப் பசுமைப் புரட்சியை மேற்கொண்டனர்.

2025-ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே இந்தப் பசுமைத் தாவரங்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் இந்த மாணவர்களின் வெற்றி, மலேசியாவின் இளம் தலைமுறையினரிடையே வளர்ந்து வரும் அறிவியல் ஆர்வத்தையும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வையும் காட்டுகிறது.

Related News

தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவு

தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவு

பினாங்கு ராமதாசர் தமிழ்ப்பள்ளியில் 50 ஆயிரம் ரிங்கிட் மதிப்பில்  ‘மேக்கர் லேப்’ திறப்பு

பினாங்கு ராமதாசர் தமிழ்ப்பள்ளியில் 50 ஆயிரம் ரிங்கிட் மதிப்பில் ‘மேக்கர் லேப்’ திறப்பு

சிரம்பான் லோரொங் ஜாவா தமிழ்ப்பள்ளி புதிய கேன்டீன் கட்டுமானம்: லீ அறவாரியம் 2 லட்சம் நிதியுதவி

சிரம்பான் லோரொங் ஜாவா தமிழ்ப்பள்ளி புதிய கேன்டீன் கட்டுமானம்: லீ அறவாரியம் 2 லட்சம் நிதியுதவி

சிலாங்கூர் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு தலா 300 ரிங்கிட் போக்குவரத்து உதவி: 3,452 மாணவர்கள் பயனடைந்தனர்

சிலாங்கூர் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு தலா 300 ரிங்கிட் போக்குவரத்து உதவி: 3,452 மாணவர்கள் பயனடைந்தனர்

புக்கிட் செலாரோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி வளர்ச்சிக்கு முன்னாள் மாணவர்கள் கரம் கோர்ப்பு! — 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

புக்கிட் செலாரோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி வளர்ச்சிக்கு முன்னாள் மாணவர்கள் கரம் கோர்ப்பு! — 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

பிரதமர் பதவிக் கால வரம்பு மசோதா: அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்வதா? அன்வாரே முடிவு செய்ய வேண்டும்

பிரதமர் பதவிக் கால வரம்பு மசோதா: அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்வதா? அன்வாரே முடிவு செய்ய வேண்டும்